சூரிய குமாருக்கு டெஸ்ட் தொப்பி தந்து செம செய்தி அனுப்பிய ரவி சாஸ்திரி?

0
196
Sky

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியிருக்கிறது!

இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூரியகுமார் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் இருவரும் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் அவர் செய்து வந்த பொறுப்பை இன்று இருவர் செய்ய வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

கடந்த வருடத்தின் கடைசி மற்றும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இளம் வீரரான சுப்மன் கில் பேட்டிங் ஃபார்ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் சதம் இரட்டை சதம் என்று விளாசி தள்ளியவர், டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்து அசத்தியிருந்தார். மேலும் கடந்த வருடத்தின் கடைசியில் பங்களாதேஷ் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமும் அடித்து இருந்தார்.

இப்படி ஒரு திறமையான ஆல் ஃபார்மட் வீரரை வெளியில் வைத்து விட்டு சூரியகுமார் மாதிரியான அதிரடி வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தரப்பட்டு இருப்பது சிறிய அளவிலான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

ஆனாலும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் சூரிய குமாருக்கு வாய்ப்பு தர வேண்டும், அவரால் மிகச் சிறப்பாக தாக்கம் மிகுந்த ஆட்டத்தை இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாட முடியும் என்று தொடர்ந்து கூறி வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று அவரது அறிமுகத்திற்கான இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை சூரிய குமாருக்கு ரவி சாஸ்திரி வழங்கினார். மேலும் அவருக்கு ட்விட் செய்துள்ள ரவி சாஸ்திரி
” டி20 கிரிக்கெட் பேட்டிங் போக்கையே மாற்றி அமைத்துள்ளீர்கள். இப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்திருக்கிறீர்கள். இங்கும் அது தொடரட்டும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார். இதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!