வெற்றி பெற்று கொண்டே இருந்தால் தான் மரியாதை – டிராவிட்டுக்கு ரவி சாஸ்திரி அறிவுரை

0
69

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  அவரது வழிகாட்டுதலில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் தொடரில் இழந்தது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டில் கூட செல்ல முடியாத இந்திய அணி உலக கோப்பை டி20 தொடரில் அரையிறுதியில் தோல்வியை தழுவி வெளியேறியது.

- Advertisement -

அண்மையில் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அதில் பயிற்சியாளர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட கொஞ்சம் நேரம் பிடிக்கும். எனக்கும் அவ்வாறுதான் நேரம் பிடித்தது.

எனவே டிராவிட்டுக்கு செயல்பட கொஞ்சம் காலம் தாருங்கள். ஆனால் என்னை விட ராகுல் டிராவிட்டுக்கு ஒரு சாதகம் இருக்கிறது. டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக இருந்தார்.  மேலும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் வீரர்களிடம் அவருக்கு ஏற்கனவே பரீட்சையம்  இருக்கும். எப்படி பயிற்சி கொடுப்பது என்று அனுபவம் கை கொடுக்கும்.

நமது நாட்டின் மக்கள் அனைத்தையும் சீக்கிரம் மறந்து விடுவார்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் பெற்ற வெற்றியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள். நான் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி ஆசிய கோப்பையை இரண்டு முறை தொடர்ந்து வென்றது.

- Advertisement -

ஆனால் அதைப் பற்றி யாராவது பேசுகிறார்களா?  ஆனால் ஆசிய கோப்பை தொடரில் நம் தோற்ற பிறகு அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது என்று நிறைய பேருக்கு நினைவு வருகிறது. அதனால் தான் சொல்கிறேன், இப்பொழுது வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். மக்கள் மறந்து விடுவார்கள். எப்போதுமே அனைவரும் வெற்றி பெற தான் நினைப்பார்கள்.

ஆனால் அதற்காக நான் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். தவறான முடிவு எடுத்தும் நாம் வெற்றி பெற முடியும். ஆனால் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். உலகத்தில் சில நாடுகள்தான் சிறப்பாக விளையாடாமல் கோப்பையை வென்று இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.டிராவிட்டின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத் தக்கது.