இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் கடைசி போட்டிக்கு முன்பாகவே மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
மேலும் நேற்று இந்த தொடரின் கடைசிப் போட்டியில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடர்பு முழுக்கவே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவி பிஸ்னாய் மற்றும் அக்சர் படி இருவரது பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருந்தது. இதில் அக்ச்சர் படேல் வருகின்ற தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாம் கட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியவில்லை. இந்த தொடர்பு முழுக்க அவர்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இந்திய சுழல் பந்துவீச்சுதான்.
இந்திய சுழல் பந்துவீச்சாளர்களிடம் இருந்த குறிப்பிடத்தக்க விஷயம், வேகப்பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் அடி வாங்கிய பொழுது, இவர்கள் இருவருமே பவர் பிளேவில் வந்து பந்த வீசினார்கள். மிகக்குறிப்பாக இவர்கள் பவர் பிளேவில் விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக கைப்பற்றினார்கள். இதுவே இந்திய அணி இந்த தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணம். மேலும் தொடர் நாயகன் விருது ரவி பிஸ்னோய்க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது ” உலகக் கோப்பை வந்தால் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வருவதை நாம் பார்க்கிறோம். இந்த முறை வருவார் என்று நான் உறுதியாக சொல்லவில்லை. ஆனால் வரலாம். டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வந்து திரும்பப் போகிறது.
இந்திய அணியில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களாக சாகல், ராகுல் சகர், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் உலகக் கோப்பைக்கு தேர் பாவர்கள் என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே உலகக் கோப்பைக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வகையில் குல்தீப் ரவி பிஷ்னோய்க்கு கடும் போட்டியாக இருப்பார்.
உலக கோப்பையில் ஒரு அணியை இரண்டு முறைதான் சந்திக்க முடியும். ஆனால் இரு தரப்பு தொடர்களில் ஐந்தாவது போட்டியிலும் விளையாட வேண்டும். எனவே ஒரு பந்துவீச்சாளர் குறித்து எதிர் அணிக்கு நன்றாக தெரியும். ஆனால் இதைத் தாண்டி ரவி நன்றாக செயல்பட்டார். மேலும் அவர் பவர் பிளேவிலும் ஈரமான பந்திலும் சிறப்பாக வீசி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!