நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சு குழுவிடம் முக்கியமான விஷயம் கூறியது பற்றி ரவி பிஸ்னாய் பேசி இருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது. மேலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. தற்போது பங்களாதேஷ் அணி வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.
சாதனை இமாலய டார்கெட்
நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் அதிரடியாக 111 ரன்கள், சூரியகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.
மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள முழு உறுப்பினர் கிரிக்கெட் நாடுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆக இது பதிவாகி உலக சாதனை படைத்தது. இப்படியான நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் இரண்டாம் பகுதியில் இந்திய அணி பந்து வீசும் போது தன்னுடைய பந்துவீச்சு குழுவுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
நாம் அடித்தது 297 அல்ல 170தான்
இதுகுறித்து ரவி பிஸ்னாய் கூறும்பொழுது “நாங்கள் மைதானத்திற்குள் பந்து பேச நுழைந்த பொழுது கேப்டன் சூரியகுமார் எங்களிடம் ‘ நாம் தற்போது 170 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதாக நினைத்து அதை பாதுகாப்பதற்காக விளையாட வேண்டும்.நாளை இதுபோன்ற ஸ்கோரை பாதுகாக்க விளையாடும் பொழுது நமக்கு இந்த அனுபவம் உதவி செய்யும்’என்று கூறினார். இந்த விக்கெட் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த பொழுதும் நாங்கள் பந்துவீச்சில் இப்படியான மனநிலையுடன்தான் இருந்தோம்”
“இந்த அணியிடம் இருக்கும் வித்தியாசமான பண்பு என்னவென்றால் நாங்கள் புதிய தலைமுறை. மேலும் நாங்கள் 297 ரன்கள் எடுத்த போதிலும் அவர்களை பந்துவீச்சில் தாக்கி 170 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தோம். நீங்கள் மேலே இருக்கும் பொழுது மேலே தான் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 2 நாளில் இந்தியா நியூசி டெஸ்ட்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?. போட்டி அட்டவணை தொடங்கும் நேரம்.. முழு விவரம்
“இந்திய அணியில் நாங்கள் விளையாடும் பொழுது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு புதிய நாள்தான் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நேற்றைய போட்டி முடிந்த உடன் அதிலிருந்து நாங்கள் வெளியில் வந்து விட வேண்டும். அதிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.