ரஷித் கானின் வித்தியாசமான பாம்பு ஷாட் – வீடியோ லிங்க் இணைப்பு!

0
186
Rashid khan

கிரிக்கெட் மரபு முறையில் இருந்து நவீனம் அடைந்து தற்போது அதிநவீன அடைந்து இருக்கிறது. கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒரு நாள் போட்டிகள் என்று மாறி அதற்கடுத்து 20 ஓவர்கள் 10 ஓவர்கள் என்று சுருங்கி வேறு ஒரு புதிய வடிவத்தில் புதிய பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கிறது!

அதிநவீன கிரிக்கெட் காலமான இன்று இதன் அடையாள வீரர்களில் ஒருவராகத் திகழக்கூடியவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 23 வயதே ஆன இவர் 66 சர்வதேச டி20 போட்டிகளில் 112 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் உலகம் முழுவதும் நடக்கும் தனியார் டி 20 கிரிக்கட் தொடர்களில் இவர் மிக முக்கியமான நட்சத்திர வீரர். இவர் அணியில் இருந்தால் இவர் வீசப் போகும் 4 ஓவர்களை பற்றி அணியின் கேப்டன் எந்த கவலையும் பட வேண்டியது இல்லை. எதிரணி பேட்ஸ்மேன்கள் தான் பயப்பட வேண்டும். எதிரணி போட்டியில் நன்றாக சென்று கொண்டு இருக்கும் பட்சத்திலும் இவரால் அந்த இடத்தில் தனது அணிக்காக ஆட்டத்தை திருப்ப முடியும்.

தற்போது இவர் பேட்ஸ்மேன்கள் ஆல் கணிக்க முடியாத தனது லெஸ்பின் பந்துவீச்சால் மட்டும் அல்லாது தனது வித்தியாசமான அதிரடி பேட்டிங் மூலமும் எதிரணிகளை மிரட்டி வருகிறார். இவர் வித்தியாசமான ஆடக்கூடிய முறையில் பந்துவீச்சாளர்கள் இவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் திணறுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் குஜராத் அணிக்கு தோல்வி உறுதி என்ற நிலையில் இவர் ஆடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இவர் ஷாட்களை ஆடுவது அனாயசமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

இதுபற்றி ரஷீத் கான் ஐபிஎல் தொடரின்போது ஹார்திக் பாண்டியாவிடம் பேசியிருந்தார் அதில் ” நான் இதை பாம்பு ஷாட் என்கிறேன். பாம்பு ஒருவரைக் அடித்தால் அது மீண்டும் மீண்டும் பாய்கிறது. பந்து புல்லென்த்தில் இருந்தால் என்னால் ஷாட்டை முழுவதுமாக முடிக்க முடியாது. சாட்டை முடிக்க என் உடல் ஒத்துழைக்காது. அதற்கு முயற்சி செய்தால் என்னால் அதற்கான உடல் சக்தியை உருவாக்க முடியாது. இதற்காக நான் இதில் கடுமையாக உழைத்து என் மணிக்கட்டை பலப்படுத்தினேன். நான் இந்தப் பாம்பு ஷாட்டை என் மணிக்கட்டை கொண்டே அடிக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இன்று துவங்கும் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக ரஷீத் கான் பேட்டிங்கில் பயிற்சி செய்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ” இன்று போற்றினால் எல்லாமே தயாராக இருக்கிறது செல்ல வேண்டும் ” பதிவிட்டு இருக்கிறார். அவர் பயிற்சி செய்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!