இன்னும் 1 விக்கெட் எடுத்தால் போதும்.. இந்திய வீரரின் ரெக்கார்டை தன்வசப்படுத்த காத்திருக்கும் ரஷித் கான்!

0
408

சிஎஸ்கே அணிக்கு எதிரான பயனுள்ளில் ரசித்தான் ஒரு விக்கெட் எடுத்தால் யுஸ்வேந்திர சஹாலில் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் ரஷித் கான்.

பதினாறாவது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் சீசன் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அதில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. தற்போது இறுதிப் போட்டியிலும் இதே அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

சிஎஸ்கே அணி பத்தாவது முறையாக பைனலுக்குள் வந்திருக்கிறது. மேலும் நான்கு முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்றவர்கள் என்னும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்ய காத்திருக்கின்றது.

அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்குள் வந்திருக்கிறது. இரண்டாவது முறையும் கோப்பையை வெல்வதற்கு காத்திருக்கிறது. இந்த சீசனின் இரண்டு பலம் மிக்க அணிகள் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சாதனை செய்ய காத்திருக்கும் ரஷித் கான்

- Advertisement -

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இதில் முகமது சமி 28 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ரஷித் கான் 27 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் 23 விக்கெட்டுகளுடன் மோகித் சர்மா இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் ஸ்பின்னர் 27 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருக்கின்றது. இந்த சாதனை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சஹல் வசம் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் ரஷித் கான்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான பைனலில் இன்னும் ஒரு விக்கெட்டை எடுக்கும் பட்சத்தில் யுசுவேந்திர சஹல் சாதனையை ரஷீத் கான் முறியடிப்பார்.