ரஞ்சி அரையிறுதி சுற்றில் தமிழக அணி மும்பை அணியை எதிர்த்து மும்பை மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் தமிழக அணிகள் இடம்பெறாத சாய் கிஷோர் இந்த முறை இடம் பெற்றார். இதேபோல் மும்பை அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்ப வந்தார்.
இந்த போட்டிக்கான ஆடுகளும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதாக தெரிந்தது. தமிழக அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 0, நாராயணன் ஜெகதீசன் 4, பிரதோஷ் ரஞ்சன் பால் 8, சாய் கிஷோர் 1, பாபா இந்திரஜித் 11 என முதல் 5 விக்கெட்டுகள் 42 ரன்களுக்கு சரிந்தது.
இதற்கு அடுத்து இணைந்த விஜய் சங்கர் 44, வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் என ஒர் அளவுக்கு போராடினார்கள். இதற்குப் பிறகு வந்த முகமத் 17, அஜித் ராம் 15, சந்தீப் வாரியர் 0, குல்தீப் சென் 0* எனக் குறைந்த ரன் பங்களிப்பு மட்டுமே செய்ய, தமிழக அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
மும்பை அணியின் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே மூன்று, சர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியன் மற்றும் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் பிருதிவி ஷாவை ஐந்து ரன்களில் குல்தீப் சென் வெளியேற்றினார். மற்றும் துவக்க ஆட்டக்காரர் புபேன் லல்வானி 15 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : “மார்ச் 5ஆம் தேதி வரை வெயிட் பண்ணுங்க.. ஐபிஎல் இந்திய அணிக்கு செம நியூஸ் காத்திருக்கு” – கங்குலி தகவல்
கடைசி கட்டத்தில் நைட் வாட்ச்மேன் மொகித் அவிஸ்தி வர, சர்பராஸ் கான் தம்பி முஷிர் கான் 53 பந்துகள் சந்தித்து 3 பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் 24 ரன்கள் எடுத்திருக்கிறார். மும்பைக்கு கால் இறுதியில் மிக நெருக்கடியான நேரத்தில் இரட்டை சதம் அடித்து அரையிறுதிக்கு வரும் முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். இன்று இவருடைய பங்களிப்பு பவுலிங் பேட்டிங் என தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!