நேற்று ஆர்சிபி அணி குஜராத் அணி இடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணி விராட் கோலி அதிரடியுடன் சிறப்பாக ஆரம்பித்த போதும் 155 ரன்னில் சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் நான்கு ஓவர்கள் மீதம் வைத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டி குறித்து ரஜத் படிதார் பேசும்போது “நிச்சயமாக நாங்கள் எடுத்த ஸ்கோர் இந்த ஆடுகளத்திற்கு போதுமானதாக இல்லை. ஆனால் நாங்கள் இந்த ஸ்கோரை எதிரணி எட்டுவதற்கு 16 ஓவர்கள் வரை போட்டியை இழுத்துச் சென்றது சிறப்பான விஷயமாக இருந்தது”
“ஆடுகளத்தில் கொஞ்சம் பசுமையான புல் இருந்தது இதை வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதே சமயத்தில் அவர்களுடைய பேட்டிங் பவர் பிளேவை கில் சிறப்பாக பயன்படுத்தி விளையாடி எங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டார். அதன் பிறகும் கூட நாங்கள் போட்டியை இழுத்துச் சென்ற வருடம் பாசிட்டிவாக இருந்தது”
“இந்த போட்டியில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் நடுவில் நாங்கள் மிக வேகமாக விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். இதன் காரணமாக நாங்கள் மிகவும் பாதுகாப்பாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். எனவே இதை மாற்றிக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : ஆர்ச்சர் என்ன செய்கிறார் என்று பாருங்க பும்ரா.. அவரோட திட்டம் தான் இப்போ உங்களுக்கு தேவை – முன்னாள் இந்திய வீரர்
“அதே சமயத்தில் நாங்கள் புள்ளி பட்டியல் பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். புவனேஸ்வர் குமார் மிகச்சிறந்த பவுலர். அவர் அற்புதமான பங்களிப்பை கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.