இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்தில் தொடங்கியது.
விக்கெட் சரிவிலும் கலக்கிய ஆர்சிபி
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணி 125 ரன்கள் 7 விக்கெட் இழந்தது. பில் சால்ட் கோல்டன் டக் ஆனார். இதைத்தொடர்ந்து விராட் கோலி 18 பந்தில் 36 ரன்கள், படிக்கல் 7 பந்தில் 14 ரன்கள், க்ருனால் பாண்டியா 6 பந்தில் 1 ரன், ஜிவேஷ் சர்மா 8 பந்தில் 5 ரன், டேவிட் 9 பந்தில் 13 ரன், ரொமாரியோ ஷெப்பர்ட் 11 பந்தில் 22 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
ஒரு முனையில் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். இம்பேக்ட் பிளேயராக வந்த வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஆர்ச்சர் சந்தீப் சர்மா, பிரஜித் சர்மா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
சூரியவன்சி சூறாவளி பேட்டிங்
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னொரு முனையில் சூறாவளி அதிரடியில் விளையாடிய சூரியவன்சி 15 பந்தில் அரைசதம் அடித்து 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் பவர் பிளேவில் 97 ரன்கள் குவித்தது. போட்டியை ஏறக்குறைய அங்கேயே முடித்து விட்டார்.
இதையும் படிங்க : முகுல் சவுத்ரி இந்த விஷயத்தில் விராட் மாதிரி.. ஆனா பேட்டிங்கில் ரசல் டேவிட் மாதிரி – ஜஸ்டின் லாங்கர் பேச்சு
இதைத்தொடர்ந்து துருவ் ஜுரல் இறுதிவரை களத்தில் நின்று 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 81 ரன்கள், ஜடேஜா 25 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவர்களில் 4 இழப்புக்கு இலக்க எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






