நான் 51 பந்தில் 28 ரன் அடித்தும்.. சூப்பர் ஓவரில் ரியான் பராக்கை அனுப்ப காரணம் இதுதான் – நிதீஷ் ரான பேட்டி

0
821

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தும் தான் ஏன் சூப்பர் அவருக்கு அனுப்பப்படவில்லை என்பது குறித்து நித்திஷ் ரானா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த தவறு

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதற்குப் பின்னர் களம் இறங்கிய நித்திஷ்ரானா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஜூரேல் மற்றும் ஹெட்மயர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்த போதும் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சால் அவர்களால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. மேலும் போட்டியின் போதே ஸ்டார்க் பந்து வீச்சுக்கு தடுமாறிய ஹெட்மயர் சூப்பர் ஓவரில் ஸ்டார்க் தான் வீசப் போகிறார் என்று தெரிந்தும் எதற்காக அனுப்பப்பட்டார் என்று தெரியவில்லை. சூப்பர் ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் தொடங்க மூன்றாவது வீரராக ஜெய்ஸ்வால் இருந்தார்.

- Advertisement -

முடிவு ஒருவர் கையில் இல்லை

இந்த சூழ்நிலையில் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அந்த போட்டியில் நல்ல நிலையில் இருந்த நிதிஷ் ரானாவுக்கு ஏன் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் இந்த முடிவு ஒருவர் மட்டுமே எடுக்கவில்லை எனவும், கேப்டன் மற்றும் இரண்டு மூத்த பயிற்சியாளர்கள் ஆகியோர் சேர்ந்து ஒருங்கிணைந்து எடுத்த முடிவு தான் எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:உலகின் பெஸ்ட் பிளேயர் அவர்.. எங்கள ஜெயிக்க விடாம பண்ணிட்டாரு.. இது மாதிரி யாராலயும் செய்ய முடியாது – சஞ்சு சாம்சன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நிர்வாகத்தில் ஒருவர் மட்டுமே இந்த முடிவை எடுப்பது அல்ல. கேப்டன், இரண்டு மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரும் இருக்கின்றனர். ஷிம்ரான் ஹெட்மயர் இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தால் நீங்கள் இந்த கேள்விகளை கேட்க மாட்டீர்கள். இதில் நான் இதை மட்டுமே சொல்ல முடியுமே தவிர, இது குறித்து பேசுவதற்கு என்னிடம் வேறு எந்த பதிலும் கிடையாது. நாங்கள் எடுத்து எந்த முடிவுகளும் முற்றிலும் சரியானவை என்று நினைக்கிறேன். ஹெட்மயர் ஒரு ஃபினிஷர். அவர் கடந்து சில வருடங்களாகவே எங்கள் அணிக்கு பினிஷராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று நித்திஷ் ராணா பேசியிருக்கிறார்.

- Advertisement -