இந்திய கிரிக்கெட்

டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ்ல இதை செய்திருக்கக் கூடாது.. என்ன லாஜிக்குனே புரியல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வீரர்களை தக்க வைத்ததில் ஒரு குறிப்பிட்ட விஷயம் லாஜிக் இல்லாதது என ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இந்த முறை சஞ்சு சாம்சன் 18 கோடி, ஜெய்ஸ்வால் 18 கோடி, ரியான் பராக் 14 கோடி, துருவ் ஜுரல் 14 கோடி, சிம்ரன் ஹெட்மயர் 11 கோடி, அன் கேப்டு பிளேயர் சந்திப் ஷர்மா 4 கோடி என மொத்தம் ஆறு வீரர்களை 79 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. தற்போது அந்த அணியின் கையில் மொத்தம் 41 கோடி ரூபாய் மட்டுமே பணம் இருக்கிறது.

ஆச்சரியப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அடையாள வீரராக இருந்து வந்தவர் ஜோஸ் பட்லர். அவர் இந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்க தொடரிலும் விளையாடிக் கொண்டு வருகிறார். எனவே இந்த அணியின் ஒரு முக்கிய அடையாள வீரராக அவர் இருக்கிறார். இப்படியான நிலையில் ஹெட்மயரை தக்கவைத்துக் கொண்டு ஜோஸ் பட்லரை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு குமார் சங்கக்கரா இடத்தில் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்று இருக்கிறார். வீரர்களை தக்க வைத்ததில் அவருடைய பங்கும் பெரிதாக இருக்கிறது. மேலும் கேப்டன் சஞ்சு சாம்சனும் இதில் தலையிட்டார் என ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்ன லாஜிக் என்று புரியவில்லை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய வீரர்களை வைத்திருந்தது. அவர்கள் யாரை தக்க வைக்காமல் போயிருந்தாலும் நிச்சயம் கவலை அடையக் கூடிய வகையில் இருந்திருக்கும். அந்த அணியில் சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் மூவரும் கட்டாயம் இருந்திருப்பார்கள்”

“இருந்தபோதிலும் ரியான் பராக் முன்பாக ஜோஸ் பட்லர் தக்கவைக்கப்படுவார் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் அவர்கள் ஜோஸ் பட்லரை விட்டு விட்டு சிம்ரன் ஹெட்மயரை தக்க வைத்தார்கள். இதில் என்ன லாஜிக் இருக்கிறது என்று புரியவில்லை. ஏனென்றால் உங்களுக்கு பட்லரை திரும்ப வாங்குவதற்கு ஆர்டிஎம் கிடையாது”

இதையும் படிங்க : பும்ரா பவுலிங் வீடியோவ பாத்துட்டேன்.. சமாளிக்க இந்த பிளான் ரெடியா இருக்கு – ஆஸி இளம் அறிமுக வீரர் பேட்டி

“ஜோஸ் பட்லர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் செயல்படவில்லை. அப்படி இருந்தும் கூட அவர் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இதே அணிக்காக விளையாடியும் வருகிறார். இது எல்லாம் இருந்த போதும் கூட அவரை இவர்கள் விட்டுவிட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by