ஐபிஎல் 2025

இந்த பையனை ஓவரா ஏத்தி விடாம.. கொஞ்சம் அமைதியா இருங்க.. அவருக்கு முதல்ல பக்குவம் வரணும்.. மீடியாவுக்கு டிராவிட் வேண்டுகோள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரராக தற்போது மாறியிருக்கும் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீடியா மற்றும் ரசிகர்கள் வைபவ் விஷயத்தை கவனமாக கையாள வேண்டும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

14 வயது இளம் சூப்பர் ஸ்டார்

கடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார். மேலும் வெறும் 14 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கும் நிலையில் தற்போது பலரால் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் யுவராஜ் சிங் இந்நாள் வீரர்கள் ஆன ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், விராட் கோலி போன்ற பலராலும் பாராட்டப்பட்டு இருக்கிறார்.

மேலும் ராஜஸ்தான் அணி இன்னும் சில போட்டிகள் இந்த லீக் தொடரில் விளையாட உள்ள நிலையில் வைபவ் பேட்டிங்கை பார்ப்பதற்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இப்போது ஏறு முகத்தில் இருக்கும் அவர், சில விமர்சனங்களையும் சந்திக்க வேண்டிவரும். எனவே வெற்றி தோல்வி என இரண்டிலும் அவரை சமநிலையில் வைத்திருக்க ராஜஸ்தான் அணி செயல்பட வேண்டும் எனவும் மேலும் ஊடகம் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் இவரது விஷயத்தில் கவனமாக கையாளுமாறு சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் கவனமாக இருக்க வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவரைச் சுற்றியுள்ள விமர்சனங்களையோ அல்லது ஊடக கவனத்தையோ முற்றிலுமாக தவிர்க்க முடியாது. எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர் அதை வழிநடத்தவும் அவரைச் சுற்றி ஒரு வலுவான அமைப்பு உருவாக்கவும் உதவுவதே இந்த யோசனையாகும். அவரது தற்போதைய நிலை இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக மாறுவதற்கான ஒரு பகுதியாகும்.

இதையும் படிங்க:சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்.. கலக்கலான பாரின் ஆல்ரவுண்டர்.. வேற லெவல் ஃபியூச்சர் பிளானிங்.. என்ன நடக்கிறது?

எனவே வெற்றி, தோல்வி என இரண்டிலும் சரிசமமான சமநிலையை வைத்திருக்க வேண்டும். என் காலத்தில் இவரைப் போல திறமையான வீரர்களான கில், ரிஷப் பன்ட், ஜெய்ஸ்வால் நாகர்கோட்டி போன்ற திறமையான வீரர்களை பார்த்திருக்கிறேன். மேலும் மற்றவர்களுக்கு அதிக நேரம் எடுக்கும். வைபவ் குறித்து கூறவேண்டும் என்றால், அவர் தற்போது ராஜஸ்தான் அணியில் அனைவரிடமும் நன்றாக பேசி வருகிறார். மேலும் சந்திப் ஷர்மா மற்றும் பரூக்கி உடன் அவருக்கு வலுவான தொடர்பு இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர் ஒரு கூச்ச சுபாவம் உள்ள பையன், இருப்பினும் அவர் ராஜஸ்தான் அணியில் மிகவும் வசதியாக இருக்கிறார். எனவே அவரை தக்க வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று டிராவிட் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts