18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
வீல் சேரில் டிராவிட்
கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறுவதாக ராகுல் டிராவிட் அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை தங்கள் அணிக்கு பயிற்சியாளராக அறிவித்தது. டிராவிட் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பயிற்சியாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ராகுல் டிராவிட் வீல் சேர் உடன் மைதானங்களில் சுற்றிவரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கான காரணத்தை அறிந்தபோது அவர் தனது மகன் அன்வேயுடன் இணைந்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் குரூப் 3 லீக்கில் விளையாடி இருக்கிறார். விஜயா கிரிக்கெட் கிளப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது காலில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஐபிஎல் தொடரின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது காயத்தை பொருட்படுத்தாமல் வீல் சேரில் அமர்ந்தபடி ராஜஸ்தான் அணியின் தயாரிப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரோடு பணிபுரிந்து வரும் விக்ரம் ரத்தோர் டிராவிட் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவரது அர்ப்பணிப்பை பாருங்கள்
இதுகுறித்து அவர் கூறும் போது “ராகுல் சார் எப்போதும் இப்படித்தான் விளையாடும் நாட்களில் கூட மிகுந்த உற்சாகத்தோடு விளையாடுகிறார். அவர் என்ன செய்தாலும் முழு அர்ப்பணிப்போடு செய்வார், அவர் காலில் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது, தசைனார் அவருக்கு கிழிந்துள்ளது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பார்க்கலாம். அவர் வீரர்களோடு நெருக்கமாக பணியாற்றுகிறார் தனித்தனியாக ஈடுபட்டு அவர்களோடு பேசுகிறார். உத்திகளை வகுக்கிறார், அவரது அர்ப்பணிப்பு அபாரமானது. அணியில் முழுமையாக இருக்கிறார்.
இதையும் படிங்க:என் 9 வயசுலயே சச்சின் மேக்ஸ்வெல்லுக்கு இதை செஞ்சேன்.. போட்டோ கூட பத்திரமா இருக்கு – குஜராத் கேப்டன் சுவாரஸ்யம்
அவருடைய இப்போது வேலை செய்வதில் பெரிய வித்தியாசம் இல்லை. நாங்கள் ஏற்கனவே ஒன்றாக வேலை செய்து இருக்கிறோம். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர் அவரோடு வேலை செய்வதை மிகவும் ரசிக்கிறேன். நாங்கள் இந்திய அணியில் இருந்த போது உலகக் கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஐபிஎல் ஒரு குறுகிய போட்டி. ஆனால் இந்திய கிரிக்கெட் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது” என்று பேசி இருக்கிறார்.