டிராவிட் சார் சொன்ன வார்த்தை தான் என் ஆட்டத்தையே மாத்திடுச்சு – ஆட்டநாயகன் தீபக் சஹார்

0
4371
Deepak Chahar and Rahul Dravid


இலங்கைக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை அடைந்தது. போட்டியில் இந்திய வீரர் தீபக் சஹர் தனது ஆல்ரவுண்டர் பங்களிப்பினால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு275 ரன்கள் குவித்தது 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலிருந்து விக்கெட்களை இழக்கச் செய்தது.

முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்ற பிருதிவி ஷா இப்போட்டியில் அதிகம் கவனம் பெற்றார் இந்த போட்டியிலும் முதல் போட்டியை போல அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் அட என்னப்பா இது எப்படி ஏமாற்றி விட்டாரே சரி நம்ம இஷான் கிஷான நம்புவோம் அறிமுக மேட்ச்லையே அரை சதம் அடிச்சவராச்சே இந்த மேட்ச் கண்டிப்பா ஒரு வின்னிங் நாக் ஆடுவார் என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அவரும் நடையைக்கட்டினார்.

- Advertisement -

பின்னர் தவானுடன் மனிஷ் பாண்டே கூட்டனி அமைதியாக சிறிது நேரம் தாக்குப் பிடித்துக் ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது கேப்டன் தவானும் நடையைக்கட்டினார் என்னப்பா இது முதல் மேட்ச்ல பிளந்து கட்டிய எல்லாருமே இந்த மேட்ச்ல நடைய கட்ராங்கனு ரசிகர்களெல்லாம் முனுமுனுக்க ராகுல் டிராவிட்டோ கூலாக உட்கார்ந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். சூரியகுமார் யாதவுடன் மணிஷ் பாண்டே கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தார்கள். மனிஷ் பாண்டேவின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் சில்லறையெல்லம் சிதறவிட்டு தலைவன் இஸ் பேக் னு சொல்லிக்கிட்டு இருக்குறதுக்கிள்ள எதிர்பாராதவிதமாக அவரும் ரன் அவுட்டாகி வெளியேற இந்திய அணிக்கு பெரும் அடியாக மாறியது .

பாண்டியா பிரதர்ஸ் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என நெனச்சுக்கிட்டு இருந்தப்போ ஹர்திக் பாண்டியா வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு சென்றார் சூரிய குமார் யாதவ் மற்றும் குர்னால பாண்டியா இருவரும் சற்று பாசிட்டிவாக விளையாட இந்திய அணிக்கு இந்த ஜோடியின் மீது நம்பிக்கை வந்தது அந்த நம்பிக்கையை நீண்ட நேரம் நிலைக்கவில்லை இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பாப்பம்பட்டி அணி பரிதாபநிலையில் உள்ளது என்று வர்ணனையாளர்களுடன் இந்திய ரசிகர்களும் பொழம்பிக்கொண்டிருந்தார்கள் சரிப்பா இந்த மேட்ச் அவ்வளவுதான் அடுத்த மேட்ச் இல்ல பார்த்துக்கலாம் அப்படிங்கிற மனநிலைக்கு இந்திய அணி ரசிகர்கள் வந்துவிட்டார்கள் அப்போதான் தீபக் சஹார் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் ஒரு கூட்டணியை அமைத்தார்கள் தொடக்கத்தில் இருவரும் விக்கெட் விழாமல் விளையாடினால் போதும்பா அப்படிங்கற மாதிரி தான் விளையாடத் தொடங்கினார்கள் .

டிராவிட் சார் சொன்ன வார்த்தை

அங்க தான் டிராவிட் கொஞ்சம் கொஞ்சமாக வீரர்களுக்கு டிப்ஸ் கொடுக்க பிறகு தீபக்சேகர் அடித்து விளையாட ஆரம்பித்தார் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது தேர்வு செய்யப்பட்ட தீபக் சஹர் கூறுகையில்

- Advertisement -

“டிராவிட் சார் என்னை அனைத்து பந்துகளையும் விளையாட சொன்னார் அவரது கீழ் நான் பல ஆட்டங்கள் ஆடியுள்ளேன் என்னைப் பற்றி அவருக்கு முழுமையாக தெரியும் அதன் காரணமாகவே அவர் என்னை முழுதாக நம்பினார் . போட்டிக்கு நடுவில் அவர் கொடுத்த நம்பிக்கையும் சொன்ன வார்த்தைகளும் தான் என்னை இந்திய அணியின் வெற்றிக்கு அழைத்துச் செல்ல உதவியது “ கூறியுள்ளார்.

போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் டிராவிட் வெற்றியின் ரகசியம் . கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவப்போது ட்ரெஸிங் ரூமிற்க்கும் பெவிலியனுக்கும் சென்று வீரர்களுக்கு ஊக்கமளித்தது அணியையும். வெற்றி பெற வைத்தார் . அதே சமயம் இலங்கை பயிற்சியாளரோ வீரர்களை திட்டிதீர்க்கவே ஆட்டம் அவரது கையிலிருந்து இந்தியாவின் கையில் வந்தடைந்தது .