டி20 உலக கோப்பையில் அலட்சியமா இருக்காதீங்க.. ஒரு மோசமான நாள் எல்லாத்தையும் முடிச்சுடும் – ராகுல் டிராவிட் எச்சரிக்கை

0
9
Dravid

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது சிறப்பாக விளையாடி வரும் இந்திய டி20 அணிக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்.

கடந்த டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது ரோகித் சர்மா குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராகுல் டிராவிட் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் மாற்றம்

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நேரத்தில் போட்டிகளை அணுகுவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. மேலும் நிறைய வீரர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது.

இதை மிகக் கச்சிதமாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் செய்தார்கள். இவர்களுடைய காலத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்தது. மேலும் நிறைய புதிய வீரர்கள் கொண்டுவரப்பட்டு சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டார்கள். உலக கிரிக்கெட் மாற்றத்திற்கு இவர்களது காலத்தில்தான் இந்திய கிரிக்கெட்டில் மாற்றம் நடந்தது.

- Advertisement -

ராகுல் டிராவிட் எச்சரிக்கை

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு இறுதிப் போட்டி ஒரே ஒருநாள் மோசமாக அமைந்தது. அதனால் அவர்களுடைய மொத்த உழைப்பும் வீணானது.

இதையும் படிங்க: கம்பீரை கோச் பொறுப்புல இருந்து தூக்க போறாங்க.. ஆனா அடுத்து இவரைக் கொண்டு வரதுதான் சரியானது – மனோஜ் திவாரி பேச்சு

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும் பொழுது ” இந்திய அணி எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் நமக்கு ஒரே ஒரு மோசமான நாள் இருந்தால் அது மொத்தத்தையும் சிதைத்து விடும். இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையில் ஃபேவரைட் ஆக தொடங்குகிறார்கள். அவர்கள் செமி பைனலுக்கு வருவார்கள். எனக்கு மோசமான அனுபவம் இருப்பதால் அன்றைய நாளில் முக்கியமாக விளையாடுவது முக்கியம் என்கிறேன். யாராவது ஒருவர் நல்ல இன்னிங்ஸ் விளையாடிக்கூட உங்களை காயமடைய வைத்து விடலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -