இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்தில் மூன்று டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ஆன ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் பும்ரா கேப்டன் பதவியை ஏற்று மிகச் சிறப்பாக அணியை வழி நடத்தியதோடு மட்டுமல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்களும் சிறப்பான முறையில் விளையாடினர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் மற்றும் விராட் கோலி 100 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிட் இந்த இருவர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்கிறார், ஆறு மாதங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது கூட கடினமான இரண்டு விக்கெட்டுகளில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று நினைத்தேன். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்திருப்பது அவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். எனவே இந்த தொடரில் பெரிய அளவில் செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:6,6,6,6,4,1.. புது சிஎஸ்கே பவுலர் ஓவரில் ஹர்திக் மாஸ் பேட்டிங்.. தமிழ் நாடு அணி தோல்வி.. விஜய் சங்கர் அதிரடி ஆட்டம் வீண்
ஜெய்ஸ்வால் நாளுக்கு நாள் பலமான வீரராக திகழ்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தான் அவர் அறிமுகமானார் என்று நம்புவது கடினம். அவர் உண்மையாக விளையாட ஆரம்பித்து நீண்ட காலம் ஆகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா செல்லவும், பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவும், ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடிக்கவும் பலரால் முடியாத காரியம். அவரது பசி, ஆசை, உந்துதல் ஆகியவற்றால் அவர் மென்மேலும் முன்னேற போகிறார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.