இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அவர் மேற்கொண்டு விண்ணப்பிக்காததால் புதிய பயிற்சியாளர் இந்திய அணிக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இந்திய பணியை விட்டு பிரியும் வேலையில் ராகுல் டிராவிட் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் சிறு சுயநலம் கூட பார்க்காமல் உழைத்த வீரர்களில் ராகுல் டிராவிட்டுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஆனால் அவர் உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றது கிடையாது என்கின்ற சோகம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவரது பயிற்சியின் கீழ் டி20 உலகக்கோப்பை தொடரை வென்று அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணியை விட்டு ராகுல் டிராவிட் நகரும் பொழுது உலகக் கோப்பையை வென்றவர் ஆக செல்கிறார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசுகையில் ” ரோகித் சர்மாவுடன் பணியாற்றியதை நான் மிகவும் ரசித்தேன். மேலும் எனக்கு அவர் சிறுவயதில் இருந்தே தெரிந்த ஒரு வீரர். அவர் ஒரு வீரராக இருந்து வளர்ந்த விதம், பிறகு தலைவராக உயர்ந்த விதம் சிறப்பானது. கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளில் ரோஹித் சர்மா ஒரு வீரராகவும் தலைவராகவும் சிறப்பாக உருவெடுத்து செயல்பட்டதற்கு இது பாராட்ட வேண்டிய நேரம்.
அணியில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும், மிகுந்த போட்டியும் தொழில்முறையாகவும் இருக்கும் அணியில் அனைவரையும் மகிழ்விக்க முயற்சிசெய்ததற்காகவும், அவர் அணி மீது கொண்டிருந்த அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இதையும் படிங்க : லெஜன்ட்ஸ் ரோகித் விராட் பாய் அழறாங்க.. ஆனா நான் அழாத காரணம் இதுதான் – அர்ஸ்தீப் சிங் பேச்சு
விராட் கோலி போன்ற ஒரு பெரிய வீரருடன், அவர் கேப்டனாக இருந்த பொழுது இரண்டு தொடர்களில் பயிற்சியாளராக இருந்தேன். அப்போது அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு தொழில் முறை வீரராக சிறப்பாக இருப்பதற்கு என்ன செய்கிறார்,அதை எப்படி வெளிக்காட்டுகிறார் மேலும் எப்படி மேம்படுத்துகிறார், விளையாட்டில் அவருக்கு இருந்த விருப்பம் இதையெல்லாம் பார்க்க எனக்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.