ராகுல் டிராவிட்டுக்கு தகுதி கிடையாது.. இந்த சிஎஸ்கே முன்னாள் வீரரை கோச்சா கொண்டு வரனும்- பாகிஸ்தான் டேனிஷ் கனேரியா அதிரடி பேச்சு!

0
866
Dravid

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ள, கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருவரும் இந்திய கிரிக்கெட் மூன்று வடிவத்திற்கும் கொண்டுவரப்பட்டார்கள்!

ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சி காலத்தில் தற்போது நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது மிகவும் நல்ல விஷயமாக தெரிகிறது. ஆனால் பிரச்சனையும் அவர் தந்து கொண்டிருக்கும் வாய்ப்புகளால்தான் இருக்கிறது.

- Advertisement -

ஒரு முக்கியமான கோப்பை வருகிறது என்றால் அதற்கு முன்பு தொடர் வரை அவர் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார். மேலும் ஒரு தொடருக்கு ஒரு நிலையான அணியை உருவாக்கி அந்த அணி உடன் தொடர்ந்து அவர் வேலை செய்வது கிடையாது. கடைசி நேரம் வரை தொடரும் பரிசோதனையால் வீரர்களுக்கு தங்களின் கதாபாத்திரம் அணியில் என்ன? என்று புரிவதில்லை. இன்னொரு புறத்தில் முக்கிய வீரர்களின் காயமும் இவருக்கு பின்னடைவை தந்திருக்கிறது.

இவருடைய பயிற்சி காலத்தில் ஆசியக் கோப்பை, டி20 உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்று பெரிய தொடர்கள் மட்டும் அல்லாது, பங்களாதேஷில் ஒருநாள் தொடரை இழந்தது, உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது, தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு போட்டிகளை டி20 வடிவத்தில் வெஸ்ட் இண்டீஸ் இடம் இழந்தது என நிறைய தோல்வி பட்டியல் நீள்கிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறும் பொழுது “இந்திய அணி ஏன் போதிய இன்டென்ட்டை காட்டவில்லை? ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தியா அதிக இன்டெண்ட்டை காட்ட வேண்டும். அதில் ஒரு பயிற்சியாளரின் பங்கு மிக மிக முக்கியம்.

ராகுல் டிராவிட் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் டி20 போட்டிகளில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் மிகவும் மெதுவாக இருக்கிறார். மறுபுறம் ஆஷிஷ் நெக்ராவை பார்க்கும் பொழுது, அவர் எப்பொழுதும் பரபரப்பாக இருந்து களத்துக்கு செய்திகளை அனுப்பி கொண்டே இருக்கிறார். இவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும்.

ஒரு சில வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் தரப்படவில்லை என்று பலர் புகார் கூறிய காரணத்தினால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்தியா ஓய்வு கொடுத்தது. ஆனால் நீங்கள் எப்போது ரன் அடிக்கப் போகிறீர்கள் சஞ்சு சாம்சன்? அவருக்கு இப்போது போதுமான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அவரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இருப்பினும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -