தற்போது பேட்டிங்கில் தடுமாறி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்தியா டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரகானே கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இன்னும் இரட்டை இலக்க ரன்னை எடுக்கவில்லை. ஆனால் அதைவிட முக்கியமாக அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் மலிவாக இருப்பது கவலையை உண்டாக்குகிறது.
ஆதரவு கொடுப்பார்கள்
இது குறித்து ரகானே பேசும் பொழுது “சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகமும் கேப்டனும் ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் ஒரு தரமான வீரர். அவர் தன்னை நம்பினால் மட்டுமே போதும். அவரிடம் விளையாட்டு இருக்கிறது; அவரிடம் திறமையும் இருக்கிறது”
“ஒரு பேட்ஸ்மேன் ஆக இந்த வடிவத்தில் நான் கண்டறிந்தது என்னவென்றால், நீங்கள் ஆட்டம் இழப்பது அசிங்கமாக தோன்றும். அது பரவாயில்லை. இது நம்பிக்கையை பற்றியது. இது நீங்கள் சென்று சுதந்திரத்துடன் நம்பிக்கையுடன் விளையாடுவது பற்றியது”
அவர் இதைச் செய்ய வேண்டும்
“நாம் ஒரு பக்கத்தில் அபிஷேக் ஷர்மாவை ஒப்பிட்டு பேசுகிறோம். ஆனால் சஞ்சு சாம்சன் வித்தியாசமான திறமையை கொண்டவர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களை நினைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி சிந்தித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : பங்களாதேஷ் ஒரு நாடு பத்து கிரிக்கெட் நாட்டுக்கு சமம்.. ஐசிசி பெரிய தப்பு பண்ணிடுச்சு – முகமது யூசுப் விமர்சனம்
“இது மீண்டும் ஃபார்முக்கு வர உதவும். அவர் 15 பந்துகளில் 30 ரன்கள் அல்லது 20 ரன்கள் எடுத்தால் கூட ஒன்றும் பிரச்சனை இல்லை. முதலில் அவர் சிறிது நேரம் களத்தில் நின்று பந்துகளை சந்தித்து விளையாட வேண்டும். பிறகு தானாக அவரிடமிருந்து ரன்கள் வரும்” என்று கூறி இருக்கிறார்.






