நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜின்கியா ரகானே பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் கோலியின் ஆட்டம் குறித்துப் பேசும்போது, அஜின்கியா ரகானே பேசுகையில், “அவருடைய மூவ்மென்ட் இப்போது குறைந்துள்ளது. முன்பு அவர் அதிகமாக மூவ் செய்வார். ஆனால் இப்போது அவர் சீக்கிரமாக செட்டிலாகி விடுகிறார். அவரிடம் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரது ஃபுட் மிகவும் நன்றாக மூவ் ஆகிறது. அவரது ஃப்ரண்ட் புட் மிகவும் அற்புதமாக மூவ் ஆகிறது. ஒரு பேட்ஸ்மேனின் ஃப்ரண்ட் புட் மூவ் ஆனால், அவரால் கேமை சரியாகக் கட்டுப்படுத்த முடியும்”
“எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் அவர் செட்டிலாகும் ஒரு ஷாட் இருக்கும். விராட் கோலியைப் பொறுத்தவரை அது லெக் சைட் ஷாட்டான ஃளிக் ஷாட் ஆகும். அவர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டாலும் கூட அந்த ஷாட்டைச் சரியாக விளையாடுவார். தொடக்கத்திலேயே அவருக்கு அந்த ஷாட் கிடைத்தது. அந்த ஷாட்டின் மூலமாகவே அவரது பேட்டிங்கில் ரிதம் கிடைத்தது. ஒருநாள் போட்டிகளில் அவர் தனது கேமை முழுமையாக மாற்றிவிட்டார். பிரேக்கிற்குப் பிறகு அவர் சற்று எச்சரிக்கையுடன் விளையாடுவார் என்று நாங்கள் விவாதித்தோம், ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. இரண்டு பிரேக்குகளுக்குப் பிறகும் அவர் அட்டாக் செய்ய முயன்றார்”
“இது அவரது மைண்ட் செட் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர் இந்த கேமை முழுமையாக என்ஜாய் செய்கிறார், அவரது மைண்ட் முற்றிலும் கிளியராக இருக்கிறது, அதனால்தான் அவரால் இப்படி விளையாட முடிகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. பாடி வெயிட் டிரான்ஸ்ஃபர் நடந்த விதம் அருமையாக இருந்தது. அவர் தனது கால்களை அவ்வளவாக நகர்த்தவில்லை. அவர் தனது கால்களை வெளியில் எடுத்துச் சென்றும், தனது தலையை முன்னோக்கித் தள்ளியும் இரண்டு வழிகளில் பந்துகளை அடிக்கிறார்”
“ஆரம்பத்தில் அவரது தலையும் காலும் அந்த அளவுக்குச் செல்லாததால் அவர் சிரமப்பட்டார், ஆனால் அந்தத் குறையை அவர் இப்போது நன்றாக மேம்படுத்தியுள்ளார். அனுபவத்தின் மூலமாக அந்த ஷாட்டை அவர் நேர்த்தியாக விளையாடியுள்ளார். இந்த ஷாட்டை யாருமே அவ்வளவு எளிதாக விளையாட முடியாது” என்று கூறி இருக்கிறார்.