இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.
ஈடன் பார்க் மைதானத்தின் பிட்ச் தன்மை எதிர்பாராத வகையில் அமைந்ததும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் சவாலான பந்துவீச்சும் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது. ஆரம்ப கட்ட பின்னடைவுக்குப் பிறகும் நியூசிலாந்து பவுலர்கள் கடைசி வரை போராடி மீண்டும் ஆட்டத்திற்குள் வர முயன்றனர்.
நியூசிலாந்து அணியின் செயல்பாடு குறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசும்போது “ஆம், ஈடன் பார்க் மைதானத்தில் பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமான பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் அவ்வளவு விரைவாகச் சூழ்நிலைக்கு ஏற்ப அடாப்ட் ஆகவில்லை என்று தோன்றுகிறது. அதோடு இந்திய அணியின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பாக இருந்தது”
“ஈடன் பார்க் மைதானத்தில் பவுன்ஸை எதிர்கொள்வது சற்று கடினமானது. அவர்கள் அதைச் சற்றே அதிகமாகப் பயன்படுத்திய விதம் மற்றும் ஸ்ரேயாஸ் ஷார்ட் பால்களுக்கு எதிராக ஃபைன் திசையில் விளையாட முயன்ற விதம் சிறப்பாக இருந்தது. மழைக்கு பிறகு பந்து அழகாக ஸ்கிட் ஆகி வந்தது. அதனால் களத்தில் சில ஷார்ட் பால்கள் வீசப்பட்டன”
“அவர்கள் பெற்ற அதிரடியான தொடக்கத்திற்குப் பிறகு நாங்கள் சுலபமாகச் சரணடைந்திருக்கக் கூடும், ஆனால் எங்களது ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர்ந்து போராடியது மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியின் இறுதியில் சில நல்ல விஷயங்களைக் கண்டறிந்துள்ளோம், அதை அப்படியே வெலிங்டன் போட்டிக்கு எடுத்துச் செல்வோம்” என்று கூறி இருக்கிறார்