இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2025.. என் இந்திய பிளேயிங் XI இதுதான்.. நான் விரும்பினாலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – ரகானே தேர்வு

அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு தன்னுடைய இந்திய பிளேயிங் லெவல் எதுவென இந்திய வீரர் ரகானே தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆசியாவை சேர்ந்த எட்டு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை தொடர செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்த தொடர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது.

சாம்சனுக்கு இடமில்லை

இதுகுறித்து ரகானே பேசும்பொழுது “கில் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். எனவே அவர் நிச்சயமாக அபிஷேக்சர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். அதே சமயத்தில் சஞ்சு சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் அவரையும் நான் அணியில் பார்க்க விரும்புகிறேன். அவர் மிகவும் திறமை வாய்ந்த தன்னம்பிக்கை கொண்ட வீரர். இது மிகவும் முக்கியமானது”

“சஞ்சு நல்ல திறமையான வீரர் என்பது அணி நிர்வாகத்திற்கு ஒரு சவாலான பிரச்சனையாக மாறி இருக்கிறது. இந்த போதிலும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற மாட்டார். அவர் விளையாட வேண்டும் என்று நான் நினைத்தால் கூட கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவர்தான் துவக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்”

- Advertisement -

என் பிளேயிங் லெவன்

“பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இருவரும் சிறப்பான முறையில் பந்து வீசக்கூடியவர்கள். எனவே இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். மேலும் அணியில் பதினொன்றாவது இடத்தை ஆடுகளத்தை பொறுத்து வரும் சக்கரவர்த்தி அல்லது ஹர்ஷித் ராணாவுக்கு கொடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : என் பையன கேப்டன் ஆக்க வேண்டாம் டீம்லயாவது சேருங்க.. நாங்க இன்னும் என்ன பண்ணனும் – ஸ்ரேயாஸ் ஐயர் தந்தை வருத்தம்

ரகானே பிளேயிங் XI: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (வி கீ), அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் சத்வர்த்தி, வருண்கர்சித்வர்த்தி, வருண்கர்சித்வர்த்தி.

- Advertisement -
Published by
Tags: Asia Cup