“நான் பார்த்ததிலேயே ரொம்ப ஒழுக்கமான பிளேயர் ரகானேதான்” – ரகானே எதிர்காலம் பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்!

0
985
Rahane

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நீடித்து பின்பு வீரராகத் தொடர்ந்து அடுத்து அந்த வாய்ப்பையும் இழந்தார் ரகானே.

இதையடுத்து கடந்த ஆண்டிலிருந்து தனது மாநில அணியான மும்பை அணிக்கு ரஞ்சி போட்டியிலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாகவும் விளையாடினார்.

- Advertisement -

இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்க, அவரால் விளையாட முடியாமல் போனது.

இவரது இடத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அனுபவ வீரரான ரகானேவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

18 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் திரும்பி வந்த ரகானே மிகச் சிறப்பாக விளையாடி நெருக்கடியான நேரத்தில் 89 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் ” அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவரால் அவ்வளவுதான் செய்ய முடியும். கே எல் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணிக்குள் திரும்பி வருவதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனவே அவர் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடுவது முக்கியம். அவர் ஒரு அழகான பையன் மற்றும் மென்மையான நடத்தையைக் கொண்டவர். நான் பணிபுரிந்த கிரிக்கெட் வீரர்களில் அவர் மிகவும் ஒழுக்கமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.

- Advertisement -

அவர் எப்பொழுதும் பயிற்சி செய்வதில் முதன்மையானவர். மேலும் ஜிம்மில் தனது மறுவாழ்வுக்கான பயிற்சிகளை செய்வதிலும் முதன்மையானவர். அவர் திரும்பி வந்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டு ஆண்டு காலம் இந்திய அணியில் இல்லாமல் திடீரென்று அவர் இந்திய அணிக்குள் வந்து மிகச் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டில் இதுவெல்லாம் ஆச்சரியமான விஷயம் கிடையாது. அவர் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் நன்றாகச் செயல்படவும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!