அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்? என இந்திய முன்னாள் வீரர் ரகானே கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி மாற்றமாக கில் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் நீக்கப்பட்டார்கள். கிஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ரகானே கருத்து
தற்போது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் வருண் சக்கரவர்த்தி அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று ரகானே கூறியிருக்கிறார். அவர் இந்திய அணிக்கு பந்துவீச்சில் முக்கியமான தாக்கத்தை கொடுக்கக் கூடியவராக இருப்பார் என்று கருதுகிறார்.
மேலும் இன்னொரு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் எல்லா போட்டிகளிலும் விளையாடுவது கடினம் என்று தெரிவித்திருக்கிறார். ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் இடம் பெறாத போது அந்த இடத்தில் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்திய பிளேயிங் லெவன் இதுதான்
ரகானே கொடுத்திருக்கும் இந்திய பிளேயிங் லெவனில் பேட்டிங் வரிசை 8 வரையில் அமைந்திருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சு விருப்பங்கள் மொத்தம் மூன்று இருக்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு இருவர் இருக்கிறார்கள். ஆறாவது பந்துவீச்சாளராக சிவம் துபே இடம் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க : 20 பந்து 310 ஸ்ட்ரைக் ரேட்.. சிஎஸ்கே சர்பராஸ் கான் சூறாவளி பேட்டிங்.. ஆனால் சோகம்.. இப்படியும் நடக்குமா?
ரகானே பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சங், அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரிங்கு சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






