பேர்ஸ்டோக்கு பதிலாக யாரும் எதிர்பார்க்காத வீரரை தூக்கி வந்த பஞ்சாப்!

0
1704
Ipl2023

நடந்து முடிந்த 15 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத பஞ்சாப் அணி , இந்த சீசனிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் , ஷிகர் தவான் கேப்டன்சியில் உள்நாட்டு மற்றும் இங்கிலாந்து வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்திருந்தது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல காரணமாக இருந்த ,
தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரனை உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது . மேலும் இந்த அணியில் இங்கிலாந்து அதிரடி வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் இருந்தார்கள் .

- Advertisement -

இதனால் அணி நிர்வாகம் , கேப்டன் ஷிகர் தவானுடன் இங்கிலாந்து அதிரடி வீரரான ஜானி பேர்ஸ்டோவை ஓபனிங்கில் இறக்கி அதிரடியான தொடக்கத்தை பெற்று, அதன்பின்னர் லிவின்ஸ்டோன், ராஜபக்சா, ஷாருக்கான் என அதிரடியான பேட்டிங் ஆர்டரை கட்டமைத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் முடிவு பெரிய ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது.

அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு , ஓய்வில் இருந்து வருகிறார் . அப்போதிருந்து, எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை . இங்கிலாந்துக்காக டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணங்களையும் அவர் தவறவிட்டார்.

கூடிய விரைவில் விளையாடுவதற்கான ஃபுல் ஃபிட்னெஸை பெறவுள்ளார். இதனையடுத்து நடக்கும், ஒருநாள் உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் இங்கிலாந்து அணிக்காக ஜானி பேர்ஸ்டோ ஆடுவது அவசியம். அதனால் அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு ஐபிஎல்லில் ஆடுவதற்கு அவருக்கு தடையில்லா சான்று வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

- Advertisement -

இதனால் இவருக்கு பதில் மாற்று வீரர் தேடிய பஞ்சாப் அணி நிர்வாக ரேடாரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுன்டர் டிராவிஸ் ஹெட் இருப்பதாக தகவல் வெளிவந்தது . ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத ஆஸ்திரேலியவைச் சேர்ந்த மேத் ஷார்ட் அறிவிக்கப்பட்டார்

மேத் ஷார்ட்டைப் பொறுத்தவரை, வலது கை ஆட்டக்காரர் 458 ரன்களுடன் ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிபிஎல்-லில் அதிக ரண்கள் எடுத்தவர். அவரின் குறிப்பிடத்தக்க செயல்பாடாக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் 230 ரன்களை துரத்தி , ஹோபர்ட் ஹரிகேன்ஸைத் தோற்கடித்தபோது ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்த நிகழ்வு அமைந்தது . ஷார்ட் ஒரு பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் மற்றும் பிபிஎல்-லில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்படதக்கது.

ஐபிஎல் 2022 இல், பேர்ஸ்டோ பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 253 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.