இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு ஐபிஎல் வரலாற்றில் மெகா சாதனையை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் வந்த பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து அதிரடியில் மிரட்டிய கூப்பர் கனோலி 46 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 87 ரன்கள், பிரியன்ஸ் ஆர்யா 37 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்து இருவருமே சதத்தை தவற விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 29 ரன்கள், ஷஷான்க் சிங் 7 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. பிரின்ஸ் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு மார்ஸ் 28 பந்தில் 40 ரன், பதோனி 21 பந்தில் 35 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்தில் 43 ரன், மார்க்ரம் 22 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யான்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : பிரியன்ஸ் ஆர்யா சரித்திர சாதனை தவறியது.. ஆர்சிபி ரெக்கார்டை உடைத்த பஞ்சாப்.. ரிஷப் பண்ட் பரிதாபம்
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டியில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத அணியாக பஞ்சாப் புதிய சாதனையை படைத்திருக்கிறது.