டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்திய வீரர்கள் ஆடி வந்தாலும் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு அணிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக இந்த மாத இறுதிக்குள் யாரை தக்க வைத்திருக்கிறார்கள் என்பதை அணிகள் அறிவிக்க வேண்டியது இருப்பதால் அதில் மும்முரமாக ஒவ்வொரு அணியும் ஈடுபட்டுள்ளன. நான்கு வீரர்களை மட்டுமே அணிகள் தக்கவைக்க முடியும் என்பதால் எந்த வீரர்களை தக்க வைப்பது எந்த வீரர்களை விடுவிப்பது என்பது பல அணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு தொடர் அமீரக மைதானங்களில் நடந்ததால் அதில் நன்கு ஆடிய வீரர்கள் இந்திய நாட்டில் எப்படி ஆடுவார்கள் என்பதிலும் சிக்கல் இருப்பதால் அணி நிர்வாகங்கள் பெரிய குழப்பத்தில் உள்ளன.
ஐபிஎல் ஆரம்பத்தில் இருந்து அதில் ஆடி வரும் அணிகளும் ஒன்று பஞ்சாப் கிங்ஸ். பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் அணி இது. முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த அணி கடந்த ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே அந்த அணிக்கு கோப்பை வெல்லும் அதிர்ஷ்டத்தை அளிக்கவில்லை. பிரெட் லீ, கெயில் யுவராஜ் போன்ற பல முன்னணி முக்கிய வீரர்கள் இந்த அணிக்காக விளையாடினாலும் யாராலும் இவர்களுக்கு கோப்பை வென்று தர முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் தன்னால் முடிந்த அளவுக்கு புதுப்புது வீரர்களை இந்த அணி ஏலத்தில் எடுத்து வருகிறது. இருந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே இந்த அணிக்கு பெரிய சிக்கலாக உள்ளது.
கடந்த முறை மெகா ஏலத்தில் கே எல் ராகுலை எடுத்து கோப்பை வெல்ல இந்த அணி திட்டமிட்டது அந்த அணி. ஆனால் ராகுல் விளையாடிய அளவு மற்ற வீரர்கள் ஆடத் தவறியதால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்த முறை ராகுலும் வேறு புதிய அணிக்கு ஆட திட்டமிட்டுள்ளதால் பஞ்சாப் அணி அவரை தக்க வைக்க போவதில்லை. மேலும் வேறு யாரும் கடந்த தொடர்களில் பெரிதாக விளையாடததால் யாரையும் இந்த முறை தக்க வைக்கப் போவதில்லை என்று அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய வீரர்களுடன் புதிய நுணுக்கங்களை செயல்படுத்தி இந்த முறையாவது பஞ்சாப் அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.