அவசரப்பட்டு சுத்தாம.. இந்த ரன்களை நான் தாண்டுனா.. அதற்குப் பின் என்னை நிறுத்துவது கடினம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
144

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சூழ்நிலையில் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணி தோல்வி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 17 பந்துகளை 33 ரன்கள் குவித்தார். நியூ சண்டிகர் ஆடுகளம் மெதுவாக காணப்பட்ட நிலையில் அதற்கு தகுந்தவாறு பேட்ஸ்மேன்கள் தங்களை மாற்றிக் கொள்ளாமல் அதிரடியாக விளையாட முயற்சித்தும் மற்றும் மெதுவாக விளையாடியும் முன்னேற முடியாமல் தவித்தனர்.

அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி, விராட் கோலி ஒரு முனையில் அபாரமாக ரன்கள் சேர்க்க, மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு விராட் கோலி 53 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார். சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு அவர்களது மண்ணில் வைத்து பெங்களூர் அணி பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறும் போது “நாங்கள் ஒரு சிறிய தவறு செய்தோம், பரவாயில்லை அதை அடுத்தடுத்து போட்டிகளில் எங்களால் திருத்திக் கொள்ள முடியும். எங்கள் பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட முயற்சிப்பவர்கள். இதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகளை மதிப்பிடுவதில் சிரமப்படுகிறோம். அல்லது நாங்கள் பெற்ற தொடக்கங்களை அதற்கு பின்னர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. நாங்கள் பாதுகாக்க கூடிய பெரிய ரன்களை அவர்களுக்கு எதிராக நிர்ணயிக்க முடியவில்லை. இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்த ஆர்சிபி.. சேஸ் மாஸ்டர் விராட் கோலி படைத்த பிரம்மாண்ட சாதனை.. 7 விக்கெட்டில் ஆர்சிபி வெற்றி

விராட் மற்றும் அவர்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் ஆடுகளத்திற்கு ஏற்ப எப்படி சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்கள் தொடக்க ஆட்டக்காரர்களிடம் மெதுவாக விளையாடுமாறு கூறினால், அதை அவர்களால் புரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் அவர்கள் இருவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். மேலும் நான் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். 10 ரன்களை முதலில் நான் கடந்து அதற்குப் பின்னர் அதிரடி ஆட்டத்தை முயற்சிக்க வேண்டும். தோல்விக்கான காரணங்கள் கூறி தப்பிக்கவில்லை. முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எங்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே இதனை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -