கில் அப்படி ஒரு காரியத்தை செய்வார்னு நினைக்கல.. என்கிட்ட யாரும் அப்படி நடந்ததில்ல – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
6
Shreyas

நேற்று திடீரென பரபரப்பாக மாறிய குஜராத் டைட்டன்ஸ் அனுப்பு எதிரான போட்டியை வென்றது எப்படி என்பது குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இன்னும் இரண்டு ஓவர்கள் முன்பாகவே முடிய வேண்டிய போட்டி விக்கெட் விழுந்ததால் பரபரப்பாக மாறியது.

- Advertisement -

கனவு போல இருந்தது

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது ” என் விரலில் காயம் பட்டிருந்த காரணத்தினால் நான் ஐஸ் வைத்துக் கொண்டிருந்தேன். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திடீரென இரண்டு விக்கெட் விழுந்து விட்டது. அதனால் கொஞ்சம் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் இப்படியான விஷயங்கள் நடக்கும். நாம் அந்த நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்”

“கூப்பர் கானலி அருமையான இளம் வீரர். அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். நேற்று பேட் புட்டில் ரஷித் கானை அடித்த 6-யை பார்க்க ஒரு கனவு போல இருந்தது. மேலும் விக்கெட் சரிந்த பொழுது அவர் செட்டில் ஆகி களத்தில் இருந்ததால் ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நினைத்தேன். அதேபோல முடித்து வைத்தார்”

- Advertisement -

இந்த விஷயத்தை சொன்னார்

“எங்கள் பந்துவீச்சின் போது அர்ஸ்தீப் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் பிடித்து நின்று வருகிறது என்று என்னிடம் சொன்னார். அதனால் பந்தை சீக்கிரம் பழையதாக மாற்றி, ஆடுகளத்தில் மெதுவாக வீச வேண்டும் என உடனே திட்டத்தை மாற்றி விட்டோம். அது எங்களுக்கு நல்ல முறையில் வேலை செய்தது”

இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தப் பையனை இந்தியாவுக்கு எதிரா இதை செய்ய வைக்கும்.. அஸ்வின் கருத்து

“மேலும் நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது எனக்கு அருகில் ஒரு ஃபீல்டர் நிற்கவைக்கப்பட்டிருந்தார். நான் குஜராத் கேப்டன் கில்லி தான் நான் இதுவரை இப்படி ஒன்றை அனுபவித்ததில்லை என்று சொன்னேன். தற்போது கேப்டன்கள் மிகவும் அக்ரசிவாக மாறி வருகிறார்கள். இதைப் பார்க்க நன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -