ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்று அணியை வழிநடத்த இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் களமிறங்க போகும் பேட்டிங் வரிசை குறித்து சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் வரிசை
தற்போது நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிடில் வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து நட்சத்திர வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் மாறி இருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்ததால் இந்த முறை இவர் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்த உள்ள பஞ்சாப் அணி மீது அதிக அளவு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தற்போது பயிற்சியாளராக இந்த அணிக்கு பொறுப்பேற்றுள்ளதால் அதிக அளவு எதிர்பார்ப்பு இந்த அணி மீது உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரை பொருத்தவரை மூன்றாவது வரிசையில் களம் இறங்கி 51 இன்னிங்ஸ்களில் 30.72 சராசரியில் 1444 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆனால் ஐந்தாவது வரிசையில் களமிறங்கி 6 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி இருந்தாலும் 68.67 சராசரியுடன் 206 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஸ்டேயாஸ் ஐயர் தான் களம் இறங்க போகும் பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
கோச் அங்கீகரிக்க வேண்டும்
இதுகுறித்து அவர் கூறும்போது “ஐபிஎல் என்பது இந்திய கிரிக்கெட் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். டி20 கிரிக்கெட்டில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால் நான் மூன்றாவது பேட்டிங் வரிசையை தேர்வு செய்வேன். அதில் தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். நான் தற்போது எந்த எண்ணில் பேட்டிங் செய்ய திட்டமிட்டு யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூற மாட்டேன். இந்த முறை எனது பேட்டிங் வரிசை குறித்து நான் தெளிவான மனநிலையில் இருக்கிறேன்.
இதையும் படிங்க:சிஎஸ்கே இல்லை.. பிளே ஆப் சுற்றுக்கு இதுதான் முதல் அணியாக தகுதி பெற வேண்டும் – ஹர்பஜன் சிங் ஆதரவு
எனவே பயிற்சியாளர் அந்த எண்ணில் என்னை அங்கீகரிக்கும் வரை தொடர்ந்து கவனம் செலுத்துவேன்” என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார். பஞ்சாப் அணியில் ஏற்கனவே நட்சத்திர பேட்டிங் பட்டாளம் அணிவகுத்து நிற்கும் நிலையில் இந்திய வீரர்களும் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் நிச்சயமாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை






