உலக டெஸ்ட் பைனலில் ஸ்டீவ் ஸ்மித்தை பௌலிங் போடாமலே புஜாரா வீழ்த்துவார் – கவாஸ்கர் ஆச்சரியமான தகவல்!]

0
617
Pujara

உலகக்கிரிக்கெட் ஒரு வழியாக ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு தன்னுடைய இயல்பு நிலைமைக்குத் திரும்பியிருக்கிறது.

இன்று இங்கிலாந்து அயர்லாந்து அணிகள் இங்கிலாந்தில் மோதிக் கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் துவங்குகிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு அடுத்து உடனே ஏழாம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இடம் பெறாத இந்திய அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன் செதேஸ்வர் புஜாரா கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து கவுண்டி அணியான சஸக்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். மேலும் கேப்டனாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் போலவே ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புஜாரா கேப்டனாக இருக்கும் சஸக்ஸ் அணியில் ஆசஸ் தொடருக்குத் தயாராகும் விதமாக இடம்பெற்று விளையாடுகிறார். இந்த இருவரும் ஐபிஎல் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் முகாமிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில்
“புஜாரா சஸக்ஸ் அணிக்கு வீரராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே அவர் ஸ்மித்தைப் பார்த்து சில யுக்திகளை வகுத்திருப்பார். இப்பொழுது அந்த ஆஸ்திரேலியா வீரர் புஜாரா அணியின் வீரர்.

புஜாரா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பதன் அர்த்தம், ஓவல் ஆடுகளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்திருப்பார். அவர் ஓவலில் விளையாடாமல் இருக்கலாம். லண்டனில் இருந்து மிகத் தொலைவாக சஸக்ஸில் இருக்கலாம், ஆனால் அவர் அங்கு இருக்கும் பொழுது இங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து இருப்பார்.

பேட்டிங் யூனிட்டை பொருத்தவரை மற்றும் கேப்டன்சியை பொருத்தவரையில் புஜாராவின் ஐடியாக்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும்!” என்று தெரிவித்துள்ளார்!