இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வாலுக்கு ஒரே ஒரு வீக்னஸ் இருக்கு.. இங்கிலாந்து இத வேணா யூஸ் பண்ணிக்கோங்க – புஜாரா பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான துவக்கத்தை தந்த ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் உள்ள பலவீனம் பற்றி இந்திய வீரர் புஜாரா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 107 பந்தில் 87 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டம் இழந்தார். பென் ஸ்டோக்ஸ் ரவுண்டு த ஸ்டெம்பில் இருந்து வெளியில் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

குற்ற உணர்வை தூக்கி எறிந்தார்

முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய் ஸ்வால் தவறவிட்ட ஐந்து வாய்ப்புகள் இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த சதத்தின் மதிப்பை அது குறைத்துவிட்டது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் அவருடைய பேட்டிங்கில் இது எதிரொலித்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டுக்கு திரும்பி வந்த ஜெய் ஸ்வால் அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மிகச் சிறப்பாக ஆரம்பித்து விளையாடி 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அது சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட ஆட்டம் இழப்பாகவே இருந்தது. இல்லையென்றால் அவர் நிச்சயம் சதம் அடித்திருப்பார். இப்படியான நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் பலவீனம் குறித்து புஜாரா இங்கிலாந்துக்கு அறிவுரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பேட்டிங் பலவீனம்

இது குறித்து புஜாரா பேசும் பொழுது “ஜெய்ஸ்வால் எடுத்ததும் ஷாட் விளையாட கடினப்படுபவர் போல இருக்கும். ஆனால் முதல் அரை மணி நேரத்தை தாண்டி விட்டதும் வெகு சாதாரணமாக ஷாட் விளையாடுவார். நீங்கள் பந்தை மேலே வைத்தால் டிரைவ், வெளியில் கட், பவுன்சர் வீசினால் புல் ஷாட் என எல்லாவற்றையும் சாதாரணமாக விளையாடுவார். இது பந்து வீசும் மணிக்கு பெரிய பிரச்சனையாகி விடுகிறது”

இதையும் படிங்க : பும்ரா விளையாடாதது நல்லதுதான்.. இந்திய அணிக்கு தொடரை காப்பாற்ற வாய்ப்பு.. என்ன காரணம்?

“எனவே நீங்கள் அவருக்கு குட் லென்த்தில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். மேலும் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வீச வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ச்சியாக வீசிக்கொண்டே இருந்தால் அவர் தவறு செய்வார். நீங்கள் அவர் தவறு செய்வதற்காக காத்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by