இந்திய கிரிக்கெட்

வெற்றி கையில் இருந்தும் இந்தியா செய்த தவறா இது?.. புஜாரா சொன்ன அந்த 5 ஓவர்கள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது வெற்றியை நோக்கி தீவிரமாக போராடி வருகிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இலங்கை அணியை விட முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி வேகமாக ரன்களை சேர்த்து, இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதனால் போட்டியின் கடைசி நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சில ஓவர்கள் முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்கலாம் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக போட்டியின் கடைசி நாளில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு இருப்பதால், இந்திய அணிக்கு கிடைத்த கூடுதல் ஓவர்கள் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புஜாரா கூறும்போது, “இந்தியா 5 முதல் 6 ஓவர்கள் முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்க வேண்டும். ஒரு அணியாக 370 ரன்களை எட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால், அதற்காக இன்னும் சற்று வேகமாக ரன்களை சேர்க்க முயற்சி செய்திருக்கலாம். மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறலாம். ஆனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டால், ஐந்தாவது நாளில் நாம் 5 முதல் 6 ஓவர்கள் முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்கலாமே என்று நினைக்கும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by