சூரியவன்சியை தூக்க என்னிடம் இந்த பிளான் இருக்கு.. பஞ்சாப் இதை செய்ய வேண்டும் – புஜாரா யோசனை

0
16
Pujara

இன்று பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்சியை எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும்? என புஜாரா பேசி இருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வைபவ் சூரியவன்சி அபாரமாக விளையாடி 36 பந்துகளில் சதம் அடித்திருந்தார். எனவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

பஞ்சாப் கூட்டு முயற்சி

பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் பவுலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்கிறார்கள். ஒருவேளை அவர்கள் முயற்சி வேலை செய்யாவிட்டால், அடுத்து பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு ரன்கள் எடுக்கிறார்கள்.

எனவே அவர்கள் அணி கூட்டு முயற்சியில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதுவரையில் அவர்கள் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

இது குறித்து புஜாரா பேசும் போது “இந்த போட்டியில் அர்ஸ்தீப் இடது கை பவுலர் என்பதால் ஓவர் ஸ்டெம்பில் இருந்து வீசுவார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் மிடில் மற்றும் ஆப் ஸ்டெம்ப் லைனில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். முதல் ஓவரில் குறைந்தது நான்கு பந்துகள் ஆவது இப்படி வீச வேண்டும்”

இதையும் படிங்க: என்ன நடந்துச்சுனு தெரியவே இல்லை.. திரும்பிப் பார்த்தா ஆர் சி பி முடிச்சு விட்டுட்டாங்க – அக்சர் படேல் வருத்தம்

“லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணியின் மோசின் கான் இப்படியான லைனில்தான் பந்தை வீசினார். இந்த லைனை விட்டு விடாமல் இருப்பதன் மூலமாகத்தான் வைபவ் சூரியவன்சியை ஆட்டமிழக்க வைக்க முடியும்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -