சிராஜைவிட இவர்தான் கில்லுக்கு இப்போ நம்பிக்கையான பவுலர்.. அதிகமா நம்புறாரு – புஜாரா கருத்து

0
0

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் வீரர் புஜாரா பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் வீசிய பந்துகளின் லெந்த் மற்றும் பிட்சில் கிடைத்த கூடுதல் பவுன்ஸ், பக்கவாட்டு நகர்வு ஆகியவை சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியிலும் பிரசித் பந்தை மேலே பிட்ச் செய்ய தயங்காமல் வீசியது சிறப்பாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அனுபவத்தில் முகமது சிராஜ் முன்னிலையில் இருந்தாலும், கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு பிரசித் கிருஷ்ணா முக்கியமான பந்துவீச்சு தேர்வாக இருப்பது போல் தெரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து புஜாரா பேசும் போது “ இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று மட்டுமல்ல, நேற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக இருந்தார். அவர் வீசிய லெந்த் அபாரமாக இருந்தது. இந்த பிட்சில் கூடுதல் பவுன்ஸ் மற்றும் பக்கவாட்டு நகர்வு கிடைக்கிறது. முதல் டெஸ்டிலும் பந்தை மேலே பிட்ச் செய்ய அவர் தயங்கவில்லை. சிராஜ் அதிக அனுபவம் கொண்டவர் என்றாலும், ஷுப்மன் கில்லுக்கு பிரசித் தான் முக்கியமான பவுலராக தெரிந்தார்,” என்று அவர் கூறினார்.


- Advertisement -

- Advertisement -