நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தடுமாறி வரும் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு புஜாரா பேட்டிங்கில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து அறிவுரை கூறியிருக்கிறார்.
கடந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. காபா டெஸ்ட் வெற்றியில் அவருடைய பங்கும் பெரிய அளவில் இருந்தது. ஆனால் இந்த முறை அவருடைய பேட்டிங் அணுகுமுறை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்ற வகையில் இல்லை.
இது குறித்து புஜாரா கூறும்பொழுது “அவர் ஹார்ட் ஹேன்ட்ஸில் விளையாடுகிறார். இப்படி செய்யக்கூடாது மேலும் அவர் தன்னுடைய ஃபுட் வொர்க்கிலும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். அவர் பந்துக்காக செல்வதை விட, ஷார்ட் பந்துகள் வருவதற்காக காத்துக் கொண்டிருப்பதை நம்மால் இந்த தொடரில் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும்”
“அவர் விளையாடிய சில ஷாட்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். ஆனால் அவர் தன்னுடைய ஷாட் செலக்ஷனில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர் டிரைவ் விளையாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பந்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் இருந்தால் அவர் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். பந்துகளை விட்டு விளையாட வேண்டும்”
“அவரிடம் ஒரு ஆக்ரோஷமான ஆட்டம் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் பொழுது நிலைமைகளுக்கு ஏற்றவாறு இருந்து பேட்டிங் செய்ய வேண்டும். பந்து எப்படி விழுகிறதோ அதற்கு ஏற்ற முறையில் விளையாட வேண்டும். நல்ல பாசிட்டிவ் மனநிலையில் இருக்க வேண்டும். நீங்கள் பந்தை பார்க்காமல் விளையாட முயற்சி செய்யக்கூடாது”
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த பிரச்சனை..பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்றதா பாக்?. சாம்பியன்ஸ் டிராபி 2025.. முழு விபரம்
“அவர் தன்னை அதிகமாக கண்ட்ரோல் செய்து கொள்ள முடியாதவராக இருக்கிறார். ஆனால் அவர் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பந்து ஆடுகளத்தில் கொஞ்சம் நல்ல முறையில் வரும் பொழுது நாம் அதற்கேற்ற வகையில் விளையாட நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எப்படி விளையாட வேண்டும் என்று வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி இருந்து நாம் செட்டில் ஆனால் பெரிய ஸ்கோர்க்கு செல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.