இந்திய கிரிக்கெட்

இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த 3 விஷயத்தை செய்யலனா.. இங்க ஒரு டெஸ்ட்டை கூட ஜெயிக்க முடியாது – புஜாரா அறிவுரை

இந்திய பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் புஜாரா அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 124 ரன்கள் நோக்கி விளையாடிய இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது. சொந்த நாட்டில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி முதல் மோசமாக விளையாடி வருகிறது.

இது நமக்கு தெரியாது

இதுகுறித்து பேசி உள்ள புஜாரா கூறும்பொழுது “முதலில் இப்படிப்பட்ட ஒரு ஆடுகளம் வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பினார்களா இல்லையா என்பது குறித்து நமக்கு தற்போது எதுவும் தெரியவில்லை. ஆனால் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் அதில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக நாம் சிறப்பாக தயாராக வேண்டும்”

“நாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசலாம். இன்னும் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்யலாம். இந்த டெஸ்ட் போட்டியில் துரதிஷ்டவசமாக நம்மிடம் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக போய்விட்டார். கேப்டன் கில் காயத்தின் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்தும் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது”

- Advertisement -

இதை செய்ய வேண்டும்

“முதலில் இப்படியான ஆடுகளங்களில் ரன்கள் எடுப்பதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் வழியை கண்டுபிடிக்க வேண்டும். இந்திய அணி இப்படிப்பட்ட ஆடுகளங்களில் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வேண்டி வந்தால், ரன் எடுப்பதற்கான வாய்ப்பு எங்கு இருந்து வரும்? இது குறித்து அணிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும்”

இதையும் படிங்க : இந்திய அணி தோல்வி.. WTC புள்ளி பட்டியல் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. மீண்டும் உருவான பழைய நிலைமை

“பேட்டிங் பயிற்சியாளர் உடன் பேட்ஸ்மேன்கள் தனியாக பேச வேண்டும். மேலும் இப்படியான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கால்களை பயன்படுத்தி விளையாட வேண்டும். மேலும் ஸ்வீப் ஷாட் விளையாட வேண்டும். இத்துடன் பாசிட்டிவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் எதிரணி பந்துவீச்சாளர்கள் மேல் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதை இந்திய பேட்ஸ்மேன் செய்ய தவறிவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by