பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வழங்கப்பட்ட கேட்ச்.. கிளம்பிய புது சர்ச்சை.. காரணம் என்ன.?

0
401

ஒன்பதாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் அணியும் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான் அணியும் மோதின.

முல்தானில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஷால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பெஷாவரா அணியின் தொடக்க ஆட்டக்காரர் அய்யூப் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் பாபர் ஹாசம் உடன் களமிறங்கிய அசிபுல்லாகான் அதிரடியாக விளையாடி பேசாவர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

- Advertisement -

அணியின் எண்ணிக்கை 72 ரன்கள் ஆக இருந்தபோது கேப்டன் பாபர் ஆசம் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் ஆசிபுல்லாகான் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பிறகு பின்னால் வந்த வீரர்கள் தனது பங்குக்கு ரன்களை குவிக்க பெசாவர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

பின்னர் 180 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் ரிஸ்வான் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக 0 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் தொடக்க ஆட்டக்காரர் யாசிர்கான் சிறப்பாக விளையாடிய 43 ரன்கள் குவிக்க, சிறப்பாக விளையாடிய மலான் 52 ரன்கள் குவித்து முல்தான் அணி வெற்றி பெற போராடினர்.

- Advertisement -

பின்னர் கடைசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட ஆரிஃப் யாகூப் வீசிய முதல் இரண்டு பந்துகளை உசாமா மிர் சிக்ஸருக்கு விளாசினார். பின்னர் ஐந்தாவது பந்தில் ஒசாமா மிர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த வில்லி யாகூப் வீசிய பந்தை பவுண்டரி லைனில் தூக்கி அடிக்க அங்கு மாற்று வீரராக ஃபீல்டிங் லைனில் நிறுத்தப்பட்டிருந்த மௌஸ்லி பௌண்டரி லைனை தாண்டி விழுந்த பந்தை பவுண்டரி லைனுக்குள் சென்று அபாரமாக கேட்ச் பிடித்தார்.

ஆனால் அவரது கால் பவுண்டரி லைனைத் தாண்டி தரையில் படுவது போல் தோன்றியது. இருப்பினும் மூன்றாவது நடுவர் இதனை விக்கெட் என அறிவித்தார். இதனைக் கண்ட கள நடுவர் சற்று திகைத்த நிலையில் அதனை கேட்ச் என அறிவித்தார். இதனால் இந்த கேட்ச் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் வில்லி ஜீரோ ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அந்த விக்கெட் தற்போது சர்ச்சையாகி உள்ளது. எனினும் அதனை ரசிகர்கள் சிறந்த கேட்ச் என்று கொண்டாடி வருகின்றனர்.

இதனால் முல்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெசாவர் அணி பதிவு செய்தது.

- Advertisement -