கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ரஞ்சி டிராபியில் பிரித்வி ஷா அசத்தல் இரட்டை சதம்; இந்திய தேர்வாளர்கள் பார்ப்பார்களா?

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி தொடர் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது!

- Advertisement -

இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் குரூப் பி பிரிவில் அசாம் , மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இதற்காக அந்த அணி அதற்குப் பிறகு வருத்தப்பட்டு இருக்க வேண்டும்!

மும்பை அணியின் துவக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் முசிர் கான் இருவரும் களம் இறங்கினார்கள். ப்ரீத்திவி வழக்கம்போல் டெஸ்ட் போட்டி என்று பார்க்காமல் டி20 வேகத்தில் ஆட ஆரம்பித்தார். பந்துகள் பவுண்டரி எல்லைகளுக்கு பறக்க ஆரம்பித்தது.

முதல் விக்கட்டாக முசிர் கான் அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்கும் பொழுது 42 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அர்மான் ஜாபர் 27 ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து அனுபவ வீரர் ரகானே பிரிதிவி ஷாவுடன் ஜோடி சேர்த்து மேலும் விக்கட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்.

- Advertisement -

ஒரு முனையில் பிரித்திவி ஷாவின் அதிரடி அனல் பறக்க ஆரம்பிக்க சதம் மற்றும் 150 ரன்கள் கடந்து மிக வேகமாக இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில் ரகானே அரை சதத்தை கடந்தார்.

இறுதியாக அதிரடியில் மிரட்டிய பிரித்விஷா இரட்டை சதத்தை அடித்து அமர்க்களப்படுத்தினார். இன்றைய ஆட்ட நாள் முடிவில் பிரித்விஷா 253 பந்தில் 240 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இதில் 33 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம். ரகானே 73 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குறித்துள்ளது. பிரித்விஷா நாளை முச்சதமும் அடிக்கலாம்!

Published by