அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20யில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான பிளேயிங் லெவன் கணிப்பு

0
159
IND vs IRE T20I

ஐ.பி.எல் தொடர் கோவிட் தாண்டி இரண்டாண்டுகளுக்குப் பிறகு முழுமையாக இந்தியாவில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. இதற்கடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்தது. இந்தத் தொடர் 2-2 என சமநிலையில் இருக்க, பெங்களூரில் நடந்த கடைசிப்போட்டி மழையால் கைவிடப்பட்டு தொடர் சமநிலையில் முடிந்தது!

இதற்கடுத்து இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்க இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை நடக்கிறது.

- Advertisement -

இதற்கு இடையில் ஜூன் 26 மற்றும் 28ஆம் தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் இன்னொரு அணி பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் இன்னொரு இந்திய அணிக்குத் திரும்ப, காயத்தால் விலகியிருந்த சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இணைந்தனர். மேலும் ராகுல் திரிபாதிக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் முழுவதும் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய ருதுராஜ் 96 ரன்களே எடுத்தார். இதில் 57 ரன் என்ற அரைசதமும் அடங்கும். ஐ.பி.எல் தொடரில் மோசமான பேட்டிங் பார்மில் இருந்த மற்றொரு துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் இந்தத் தொடரில் ஐந்து ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி 206 ரன்களை, 150.36 என்ற மிகச்சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார்.

இந்தக் காரணங்களால் ஐ.பி.எல்-ல் துவக்கம் மற்றும் மூன்றாவது வரிசையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட ராகுல் திரிபாதிக்கு ருதுராஜிக்குப் பதிலாய் வாய்ப்பு கொடுத்தும் பார்க்கலாம். இஷான் கிஷானின் இடத்திற்கு ஆபத்து வருவதிற்கான வாய்ப்புகள் குறைவு.

- Advertisement -

அதேபோல் இன்னொரு இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஸ்ரேயாஷ் ஐயர், மற்றும் ரிஷாப் பண்ட் இடத்தில் சூர்யகுமார் யாதவும், சஞ்சு சாம்சனும் இடம் பெறுவது உறுதி. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று ஒரு போட்டியிலும் விளையாடாத அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவும் செய்யலாம்.

ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துப் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என்கிற காரணத்தினால், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான நாம் தேர்ந்தெடுந்துள்ள உத்தேச இந்திய அணியின் ப்ளேயிங் லெவன்:

பேட்டிங்கில் முதல் மூன்று இடங்களுக்கு

இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ்.

பேட்டிங்கில் நடுவரிசைக்கு

சஞ்சு சாம்சன், கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

பேட்டிங்கில் பினிசிங்கிற்கு

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

சுழற்பந்து வீச்சாளர்கள்

அக்சர் படேல், ரவி பிஷ்னோய்.

வேகப்பந்து வீச்சாளர்கள்

புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.