ஃபைனல் மேட்ச்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. வருண் அபிஷேக் நீக்கம்?.. கம்பீர் அதிரடியில் இறங்குகிறாரா – முழு அலசல்

0
3
Surya

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்தியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்று பார்க்கலாம்.

இந்த போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்திருக்கிறது.

- Advertisement -

அபிஷேக் வருண் பிரச்சனை

இந்த உலகக் கோப்பைத் தொடர் ஒட்டுமொத்தமாக இதுவரையில் அபிஷேக் ஷர்மாவுக்கும், அவரால் இந்திய அணி நிர்வாகத்திற்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. அவருடைய பார்ம் மோசமாக இருக்கிறது என்பதை விட அவருடைய தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் தவறான ஷாட் விளையாடுகிறார்.

அடுத்து இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் மிக முக்கிய வீரராக வருண் சக்கரவர்த்தி எதிரணி பேட்ஸ்மேன்கள் தாக்கி விளையாடினால் உடனடியாக பதற்றம் அடைந்து லென்த்தை ஷார்ட் ஆக வீசி தவறு செய்கிறார். இதனால் சுலபமாக சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். எனவே இவர்கள் நீக்கப்பட்டு ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் இருவரையும் கொண்டு வர வேண்டுமென வெளியில் நிறைய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

கம்பீர் மாற்றுவாரா?

அதே சமயத்தில் கிரிக்கெட் வல்லுனர்கள் கம்பீர் உறுதியாக இந்த வீரர்களை மாற்ற மாட்டார் என்று கூறுகிறார்கள். கடந்த உலகக் கோப்பையில் விராட் கோலி இறுதிப்போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடியது போல அபிஷேக் சர்மாவும் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். மேலும் வருண் சக்கரவர்த்தியை மற்ற அணிகள் போல நியூசிலாந்தால் தாக்கி விளையாட முடியாது என்றும் கூறுகிறார்கள். இதன் காரணமாக பழைய அணியே விளையாடும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:

இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -