இந்திய கிரிக்கெட்

இலங்கை போட்டி.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. மாற்ற நெருக்கடியில் கம்பீர்.. தோற்காமல் பைனல் போகுமா இந்தியா?

நாளை ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கம்பீர் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

நடப்பு ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்று நாளை இலங்கை இந்திய அணிகள் மோதும் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளை இரண்டாவது சுற்று வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெல்பவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவார்கள்.

சிவம் துபே தேவையா?

தற்போது இந்திய அணியில் பேட்டிங் வரிசை 8 வரையில் இருக்கிறது. எட்டாவது இடத்தில் பேட்டிங் வேண்டும் என சிவம் துபே அணியில் இருக்கிறார். இதற்காக மிக முக்கிய பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங் தொடர்ந்து வெளியில் வைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் முக்கிய போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் என யாராவது ஒருவரை குறிவைத்து தாக்கினால் சிவம் துபே பந்து வீச வேண்டியதாக இருக்கும். அந்த நிலையில் அவரை விளையாடுவது எளிதாக அமைந்து விடும். பெரிய போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டு விடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

- Advertisement -

கம்பீர் சமாதிப்பாரா?

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்த முடிவுக்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே நாளைய போட்டியிலும் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே அணியை விளையாட வைப்பார் என்று தெரிவிக்கிறார்கள். இதன் காரணத்தால் சிவம் துபே அல்லது குல்தீப் யாதவ் இடத்தில் அர்ஸ்தீப் சிங் விளையாட வைக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடிச்சிட்டீங்க.. பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு எடுத்திருக்கவே கூடாது – இர்பான் பதான்

இந்திய பிளேயிங் XI : கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ்.

- Advertisement -
Published by
Tags: Ind vs Sl

Recent Posts