இந்திய கிரிக்கெட்

தெஆ முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய சிக்கல்.. 3 பேரில் யாருக்கு வாய்ப்பு?

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நாளை ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு எப்படியான இந்திய பிளேயிங் லெவன் அமையலாம்? என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு காயம் அடைந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் இடம் பெறவில்லை. இவர்களுடைய இடத்தில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ருதுராஜுக்கு இடம் கிடைக்குமா?

இந்திய பிளேயிங் லெவனில் தொடக்க இடத்துக்கு ரோகித் சர்மா உடன் ஜெய்ஸ்வால் களம் இறங்க அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே ருதுராஜுக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது கடினம். இதே போல் நான்காவது இடத்தில் பகுதி நேர ஆப்-ஸ்பின் வீசக்கூடிய திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

தற்போது ஹர்திக் பாண்டியா இடத்தில் ஆல்ரவுண்டராக நிதீஷ் குமார் ரெட்டி இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் யாரை விளையாட வைப்பது என்பது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்து வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கலாம்.

- Advertisement -

15 பேர் கொண்ட இந்திய அணி

கேஎல் ராகுல் (கேட்ச்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் துருவ் ஜூரெல்.

இதையும் படிங்க : சூர்யகுமார் செய்யும் இந்த விஷயத்தை நான் முழுசா வெறுக்கிறேன்.. டி20 WCக்கு முன்னாடி இதை கைவிடுங்க – அஸ்வின் கோரிக்கை

இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கேஎல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -
Published by
Tags: Ind vs SaODI