ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பிப்ரவரி இருபதாம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் என மொத்தம் மூன்று அணிகளிடம் இருக்கின்றன. நல்ல ரன் ரேட் இருக்கும் பொழுது இரண்டு வெற்றிகள் பெற்றாலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். மூன்று போட்டிகளை வென்றால் குழுவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு சிரமம் இல்லாமல் முன்னேறலாம்.
தற்போது இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை விட பங்களாதேஷ் அணி வலிமை குறைந்த அணியாக பார்க்கப்படுகிறது. எனவே பெரிய அணியில் ஒன்றை வெல்வது எவ்வளவு முக்கியமோ அதை விட அதிக முக்கியம் சிறிய அணியை வென்றாக வேண்டும். எனவே இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி மிக அவசியம்.
இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா, கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள். இதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார்கள். மேலும் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருவரும் முதல் ஆறு இடங்களில் இருப்பார்கள்.
மேலும் தொடர்ந்து சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக அக்சர் படில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் முதல் போட்டி என்பதால் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இடத்தில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் ஒரே ஒரு மாற்றமாக ஹர்ஷித் ரானா வாய்ப்பு பெறுவது கடினம். அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி இருவரும் இடம் பெறுவார்கள்.
இதையும் படிங்க : இந்திய அணியை விட பாகிஸ்தான் வலிமையானது.. இத செஞ்சா சும்மா ஜெயிப்போம் – முகமது யூசுப் பேட்டி
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷமி.