2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் அதிரடியாக தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிக அதிகபட்ச எதிர்பார்ப்புகள் இரு நாட்டு ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் அணியின் பலவீனம்
பொதுவாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்று கூறப்படும். ஆனால் சமீப காலத்தில் அவர்களுடைய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களே மிகவும் மோசமான பார்மில் இருந்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் அணியின் பேட்டிங் ஆர்டரில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர் பகார் ஜமாத் மட்டுமே இருக்கிறார். மேலும் சிறப்பான சுழல் பந்துவீச்சு அவர்களிடம் இல்லை.
இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரே ஒரு பின்னடைவு மட்டுமே இருக்கிறது. அது உலகில் மாற்று வீரரே இல்லாத பும்ரா இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெற முடியாதுதான். மற்றபடி இந்திய அணி எல்லா பகுதிகளிலும் மிகவும் பலம் வாய்ந்ததாகவும் செட் ஆன அணியாகவும் இருக்கிறது.
பாகிஸ்தான் அணியே வெல்லும்
இதுகுறித்து முகமது யூசுப் பேசும்பொழுது ” இந்தியா வலிமையான அணிதான். ஆனால் பாகிஸ்தான் சொந்த மண்ணில் விளையாடுவதால் பலம் பெற்று இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது கணக்கிடப்பட்ட கிரிக்கெட் விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக கேப் பார்த்து விளையாட வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக இதை செய்யாமல் விட்டது. இதைச் செய்தால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும்”
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் கோப்பை.. இந்தியாவின் முதல் போட்டியில் எந்த பவுலருக்கு வாய்ப்பு? கம்பீர் அதிரடி முடிவு
“மேலும் நியூசிலாந்து அணியை எடுத்து பார்த்தால் தற்போதைய சூழ்நிலையில் விளையாடுவதற்கு சிறந்த சமமான அணியை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் உறுதியான முதல் ஆறு பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல் றவுண்டர் மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் ஆல்ரவுண்டர் இருக்கிறார். எனவே அவர்களும் பலமான அணியாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






