நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நாளை வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணி மோதிக் கொள்ளும் மிக முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி உலகக் கோப்பையை விட்டு வெளியேறும். இது அறிவிக்கப்படாத காலிறுதி போட்டி போல அமைந்திருக்கிறது.
புது தலைவலி
தற்போது வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிரணிகள் ஓரளவுக்கு கனித்திருப்பதும், அவர் கூடுதலாக ஷார்ட் பந்துகளை வீசுவதும் இந்திய அணியால் மிடில் ஓவர்களில் தாக்கத்தை செலுத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எனவே ஐபிஎல் தொடரில் அவரது சொந்த மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டனில் அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தவரையில் அவர்கள் எத்தனை விக்கெட் விழுந்தாலும் அதிரடியாக மட்டுமே விளையாடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 83 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த போதும் அவர்கள் அதிரடியாக விளையாடிய 176 ரன்கள் எடுத்தார்கள். எனவே அவர்கள் விக்கெட்டை கைப்பற்றாவிட்டால் சிறிது அழுத்தத்தை கூட உண்டாக்க முடியாது.
இந்திய அணியில் முக்கிய மாற்றம்
தற்போது இந்திய விளையாடும் அணியில் வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை கொடுக்க முடியாமல் தடுமாறுகின்ற காரணத்தினால், அர்ஸ்தீப் சிங்கை வெளியில் வைத்து குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வரலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். அப்போது பவர் பிளேவில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நான்கு ஓவர்கள் பந்து வீச வேண்டும். இதுவும் இந்திய அணிக்கு சிக்கலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டார்கள் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : உங்க முதல் பந்து திட்டத்தை எதிரணி கண்டுபிடிச்சிட்டாங்க.. தயவு செஞ்சு யோசிங்க.. வருண் சக்கரவர்த்திக்கு பத்ரிநாத் அறிவுரை
இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.






