நாளை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்று பார்க்கலாம்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் நாளை மூன்றாவது போட்டி ஹிமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
கடந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ஒரே ஓவரில் ஏழு வைடுகளை வீசியதோடு புல்டாஸ் பந்துகளாக வீசி இந்திய அணிக்கு போட்டியில் முதல் பகுதியில் பின்னடைவை உருவாக்கி இருந்தார். அதே சமயத்தில் சிவம் துபே இரண்டு ஓவர்கள் பந்து வீசி சிறந்த முறையில் செயல்பட்டிருந்தார்.
இதன் காரணமாக பூம்ரா ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே என வேகப் பந்துவீச்சு யூனிட்டை வைத்துக்கொண்டு, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என மும்முனை சுழல் தாக்குதலை கம்பீர் மீண்டும் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மூன்றாவது போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், அங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருக்கும் என்பதால், அடுத்த போட்டியில் அர்ஸ்தீப் சிங்கை நீக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக பழைய அணியை களம் இறங்கும் என யூகிக்கப்படுகிறது. சுப்மன் கில் துணை கேப்டன் என்பதால் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.
இதையும் படிங்க: கில் எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.. எனக்கு அவர் நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு – முகமது கைஃப்
இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.