தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பிரசித் கிருஷ்ணா ஹாட்ரிக்.. தமிழக வீரர் அதிரடி சதம்.. கலக்கும் இளம் படை!

0
1042
India A

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவில் ஆன கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது.

இதே நேரத்தில் நான்கு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்க ஏ அணியுடன் விளையாட இந்திய ஏ அணி பயணப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டாம் பகுதியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட சில மூத்த வீரர்களும் பங்கு பெற்று விளையாட இருக்கிறார்கள். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பயிற்சி பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆரம்பமானது. இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியை பந்து வீசுவது என தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ரூபின் ஹர்மான் 95, ஜீன் டு பிளசிஸ் 106 ரன்கள் எடுக்க அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 98.1 ஓவரில் 319 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு, அதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 14, தேவதத் படிக்கல் 30, கே எஸ் பாரத் 6, துருவ் ஜுரல் 0 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இந்த நிலையில் 22 வயதான தமிழகத்தின் பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் சர்பராஸ் கான் இணைந்து இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீட்டு எடுத்தார்கள்.

அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 85 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற தமிழகத்தின் இளம் வீர பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

தற்போது இந்திய அணி 300 ரன்கள் தொட்டிருக்க, பிரதோஷ ரஞ்சன் பால் 165 பந்துகளில் 20 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். இவருடன் சேர்ந்து விளையாடி வரும் சர்துல் தாக்கூர் 25 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.