திடீரென இந்திய அணிக்குள் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா – காரணம் இது தான்

0
292
Prasidh Krishna and Virat Kohli

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரண்டு அணிகளும் சரிசமமாக 1-1 என்ற நிலையில் இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. குறிப்பாக மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெறும் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்திற்கு ஆளாயினர்.

பேட்டிங் தான் மோசமாக இருக்கிறதென்றால் பந்துவீச்சு அதைவிட மோசமாக இந்திய அணிக்கு இருந்தது. குறிப்பாக இஷாந்த் சர்மா 22 ஓவர்கள் வீசி 92 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் சற்று மந்தமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்திய அணியின் ஸ்குவாடில் புதிதாக இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். யாருக்கு பதில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது இந்திய அணியின் பயிற்சியாளர் பரத் அருண் இது பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் பேசும்போது, “யாருக்கும் காயம் எல்லாம் ஏற்படவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை நாங்கள் செய்துள்ளோம்” என்று கூறினார். மேலும் இது தனிநபர் முடிவு இல்லை என்றும் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் எடுக்கப்பட்ட முடிவு என கூறியுள்ளார்.

ஜூன் மாதம் முதலே இந்திய அணியின் ஸ்குவாடில் மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்று வருகிறார். மற்றொரு மாற்று வீரரான அவேஸ் கான் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

மேலும் இதுகுறித்து பரத் அருண் கூறுகையில், “முன்னணி பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை குறைக்கவே அணியில் இவரை இணைத்துள்ளோம்” என்று கூறினார். ஷமி, சிராஜ் மற்றும் பும்ரா என மூவரும் வரிசையாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி விட்டனர். இஷாந்த் இரண்டு போட்டிகளில் வரிசையாக ஆடி விட்டார்.

- Advertisement -

பின்வரும் நாட்களில் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் என வரிசையாக வர இருப்பதால் வீரர்களை சரியான முறையில் கையாள வேண்டும் என பரத் கூறியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணி மார்க் உட் என்ற வேகப்பந்து வீச்சாளரை அணியில் இணைத்துள்ளது. தற்போது இந்திய அணியும் புதிதாக ஒரு வீரரை கிடைத்துள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.