பொல்லார்ட் 210 ஸ்ட்ரைக்ரேட் .. மும்பை நியூயார்க் அணி அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவின் டிஎஸ்கே அணியை முந்தியது!

0
261
MLC2023

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் போல அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடர் நடைபெற்று வருகிறது!

இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் அணிகளை வாங்கி உள்ள உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்!

- Advertisement -

நேற்று இந்த தொடரில் நடைபெற்ற மிக முக்கியமான போட்டி ஒன்றில் வாஷிங்டன் பிரீடம் அணியும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதிக்கொண்டன. இதில் ஒரு அணி இன்னொரு அணி உடன் ஒருமுறை போதும். மொத்தம் ஒரு அணிக்கு ஐந்து போட்டிகள் என்பது முக்கியமானது.

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் பிரீடம் அணிக்கு நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் 35 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சித்தர்கள் உடன் 42 ரன்களும், ஆஸ்திரேலியா வீரர் மற்றும் வாஷிங்டன் பிரீடம் அணியின் கேப்டன் ஹென்றிகுயிஸ் 30 பந்தில் இரண்டு பவுண்டரி உடன் 32 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் கேப்டன் பொல்லார்ட் நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு இந்த முறை அமெரிக்க அணியின் வீரர்களான சியாங்க் ஜகாங்கீர் மற்றும் மோனக் பட்டேல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் 29 மற்றும் 44 ரன்கள் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 33 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். கேப்டன் கீரன் பொல்லார்ட் பத்து பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 21 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இவர்கள் இருவரது அதிரடியின் காரணமாக 15 புள்ளி மூன்று ஓவர்களில் இலக்கை எட்டி நான்காவது ஆட்டத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை முந்தி மேலே சென்றது மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி. சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

நான்கு ஆட்டத்தில் மூன்று வெற்றிகள் பெற்றுள்ள சீட்டில் ஆர்கஸ் அணியும், முழுமையாக ஐந்து ஆட்டத்தில் மூன்று வெற்றிகள் பெற்றுள்ள வாஷிங்டன் பிரீடம் அணியும் அடுத்த சுற்றுக்கான தகுதியை எட்டி உள்ளன.

ப்ளே ஆப் சுற்றுக்கான மீதம் இரண்டு இடங்களுக்கான போட்டியில் நான்கு போட்டியில் தலா இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்,
சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் ஆகிய மூன்று அணிகளும் களத்தில் இருக்கின்றன.

இந்த அணிகளுக்கு இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது. அதே சமயத்தில் முழுமையாக ஐந்து ஆட்டத்தில் விளையாடி நான்கு ஆட்டங்களை தோற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறி இருக்கிறது!